brett lee

உலகின் அபாயகரமான பேட்ஸ்மேன் யார் என்ற ரசிகர் ஒருவரின் கேள்விக்கு ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் பிரட் லீ பதிலளித்துள்ளார்.

Advertisment

13 -ஆவது ஐ.பி.எல் தொடர் வரும் 19 -ஆம் தேதி அமீரகத்தில் தொடங்க இருக்கிறது. முதல் போட்டியில் சென்னை மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன. இத்தொடர் தொடங்குவதற்கு இன்னும் இரண்டு நாட்களே இருப்பதால் ரசிகர்கள் பெரும் உற்சாகத்தில் உள்ளனர். இந்நிலையில் ஆஸ்திரேலிய அணியின் மூத்த வேகப்பந்து வீச்சாளரான பிரட் லீ தன்னுடைய சமூக வலைத்தள பக்கத்தில் ரசிகர்களுடன் உரையாடினார். அப்போது அவர் ரசிகர்கள் கேட்ட பல கேள்விகளுக்குப் பதிலளித்தார்.

Advertisment

அதில் ஒரு ரசிகர், 'உலகின் அபாயகரமான பேட்ஸ்மேன் என்றால் அது யார்?' என்று கேள்வியெழுப்பினார். அதற்கு பிரட் லீ, 'ரோகித் ஷர்மா என்று பதிவிட்டு இந்த ஐ.பி.எல் தொடரில் அவரிடம் இருந்து பெரிதாக ஒன்றை எதிர்பார்க்கிறேன்' எனப் பதிலளித்தார்.