Skip to main content

"உண்மையிலேயே நீங்கள் சாம்பியன்..." வாட்சன் ஓய்வு குறித்து பிரட் லீ நெகிழ்ச்சி!

Published on 03/11/2020 | Edited on 03/11/2020

 

watson

 

ஆஸ்திரேலிய மற்றும் சென்னை அணியின் அதிரடி வீரரான வாட்சன் கிரிக்கெட்டில் இருந்து முழுமையாக ஓய்வு பெற்றதையடுத்து, அவருக்கு ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளர் பிரட் லீ வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

 

பஞ்சாப் அணிக்கு எதிரான சென்னை அணியின் கடைசி லீக் போட்டியில் பெற்ற வெற்றியையடுத்து, சென்னை அணியின் அதிரடி வீரரான வாட்சன் கிரிக்கெட்டிலிருந்து முழுமையாக ஓய்வு பெற இருப்பதாகத் தகவல்கள் வெளியாகின. இதனையடுத்து, தனது ஓய்வு முடிவை இன்று காணொளி வெளியிட்டு வாட்சன் உறுதிப்படுத்தினார். அவருக்குப் பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். 

 

ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளரான பிரட் லீ வெளியிட்டுள்ள வாழ்த்துப் பதிவில், "நம்பமுடியாத கிரிக்கெட் பயணம். வாழ்த்துகள் வாட்சன். உங்களுடன் இணைந்து விளையாடியது மிகப்பெரிய மகிழ்ச்சி. 39 வயதில் நீங்கள் வெளிப்படுத்திய ஆட்டம் வியக்கத்தக்க வகையில் இருந்தது. என்னுடன் இணைந்து விளையாடிய சகவீரர் மட்டுமல்ல, நீங்கள் உண்மையிலேயே சாம்பியன்" எனப் பதிவிட்டுள்ளார்.

 

 

 

Next Story

“இதற்கு தோனியே மிக முக்கிய காரணம்” - தோனி குறித்தும் அவரது ஓய்வு குறித்தும் ஷேன் வாட்சன்

Published on 21/03/2023 | Edited on 21/03/2023

 

"Dhoni is the most important reason for this" comments Shane Watson on Dhoni and his work

 

ஐபிஎல் போட்டித் தொடரின் 16 ஆவது சீசன் மார்ச் மாதம் 31 ஆம் தேதி துவங்க இருக்கிறது. முதல் போட்டியிலேயே சென்னை அணி நடப்புச் சாம்பியனான குஜராத் அணியை சந்திக்க உள்ளது.

 

சென்னை அணியின் கேப்டனாக பொறுப்பேற்ற தோனி 4 முறை ஐபிஎல் கோப்பைகளை வென்று கொடுத்துள்ளார். இதுவரை 11 முறை சென்னை அணி ப்ளேஆஃப் சுற்றுக்கு முன்னேறக் காரணமாகவும் இருந்துள்ளார். சென்னை அணி வெற்றிகரமான அணியாக இருப்பதற்கு காரணமே தோனி தான் என ரசிகர்கள் பலர் கூறி வருகின்றனர். நடப்பு ஐபிஎல் தொடரே தோனிக்கு கடைசி ஐபிஎல் போட்டியாக இருக்கும் எனப் பலர் கூறி வருகின்றனர். மேலும், சென்னையில் விளையாடிய பின்பே ஓய்வு பெறுவேன் என தோனி ஏற்கனவே அறிவித்திருந்தார். 

 

இந்நிலையில், சென்னை அணிக்காக விளையாடிய ஆஸ்திரேலியாவை சேர்ந்த முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷேன் வாட்சன் தோனியின் ஓய்வு குறித்து கூறியுள்ளார். அவர் கூறியதாவது, “இந்த ஐபிஎல் தோனியின் கடைசி ஐ.பி.எல். போட்டி என்று கேள்விப்பட்டேன். ஆனால், நான் அப்படி நினைக்கவில்லை. தோனியால் அடுத்த 3 அல்லது 4 ஆண்டுகளுக்கு ஐபிஎல் தொடரில் தொடர்ந்து விளையாட முடியும். 

 

அவர் இன்றும் நல்ல உடல் தகுதியுடன் இருக்கிறார். பேட்டிங் மற்றும் விக்கெட் கீப்பிங்கில் மிகவும் நன்றாகச் செயல்படுகிறார். தோனியின் ஆட்டத்தைப் போலவே அவரது தலைமையும் சிறப்பான ஒன்றாக உள்ளது. உடற்தகுதி மற்றும் ஆட்டத்தைப் புரிந்து கொள்ளும் தன்மை தோனியை நல்ல தலைவனாக்கியது. மைதானத்தில் அவரது திறமை அபாரமான ஒன்று. சி.எஸ்.கே வெற்றிகரமான அணியாக இருப்பதற்கு தோனி மிக முக்கிய காரணம்” எனக் கூறினார். ஷேன் வாட்சனின் இந்த கருத்து தோனி ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

 

 

 

Next Story

டெல்லி அணியுடன் கைகோர்த்த ஷேன் வாட்சன்!

Published on 15/03/2022 | Edited on 15/03/2022

 

shane watson joins delhi team as assistant coach

 

உலகமெங்கிலும் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருக்கும் ஐபிஎல் தொடர் மார்ச் 26 ஆம் தேதி தொடங்கவுள்ளது. இந்தாண்டு முதல் ஐபிஎல் தொடரில் 10 அணிகள் பங்கேற்பதால், அணிகளை ஏ,பி என இரண்டு குழுக்களாகப் பிரித்து லீக் போட்டிகளை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி ஏ குழுவில் மும்பை, கொல்கத்தா, ராஜஸ்தான், டெல்லி, லக்னோ ஆகிய அணிகளும், பி குழுவில் சென்னை, ஹைதராபாத், பெங்களூர், பஞ்சாப், குஜராத் ஆகிய அணிகள் இடம்பெற்றுள்ளன.  இந்தாண்டு ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டி மே 29 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

 

இந்நிலையில் டெல்லி அணியின் உதவி பயிற்சியாளராக முன்னாள் சி.எஸ்.கே வீரர் ஷேன் வாட்சன் அறிவிக்கப்பட்டுள்ளார். ராஜஸ்தான் அணிக்காக 78 ஆட்டங்களில் விளையாடிய வாட்சன், இரு வருடங்கள் ஆர்சிபி அணிக்கு விளையாடி பிறகு 2018-ல் சிஎஸ்கேவுக்குத் தேர்வானார். அந்த ஆண்டு சிஎஸ்கே அணி கோப்பையை வெல்ல மிக முக்கியமான காரணமாக இருந்தவர்களில் ஒருவர் வாட்சன். 2020 நவம்பரில் அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் ஓய்வு பெற்ற வாட்சன், தற்போது முதன்முறையாக ஒரு அணிக்கு உதவி பயிற்சியாளராகச் செயல்பட உள்ளார். டெல்லி அணியின் பயிற்சியாளராக ரிக்கி பாண்டிங் உள்ள நிலையில், தற்போது உதவி பயிற்சியாளராக வாட்சன் நியமிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.