வரும் 30 ஆம் தேதி இங்கிலாந்து நாட்டில் ஒருநாள் உலகக்கோப்பை தொடர் தொடங்க உள்ளது.

Advertisment

brendon mccullam and kevin peterson about dhoni

இந்நிலையில் இந்திய அணியில் தோனியின் பங்கு குறித்து பேசியுள்ளநியூஸிலாந்து வீரரும், முன்னாள் சிஎஸ்கே வீரருமான மெக்கல்லம், "இந்திய அணிக்கு விலைமதிப்பற்றவர் தோனி. ஒரு போட்டியை எதிர்கொள்ளும் போது அவர் மனதில் ஒரு ப்ளூப்ரின்டே வைத்திருப்பார். அவர் களத்திற்கு வரும் போது கண்டிப்பாக எதிரணியினருக்கு பிரச்சனை ஏற்படுத்திவிடுவார்" என கூறியுள்ளார்.

மேலும் இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் கெவின் பீட்டர்சன், தோனி குறித்து கூறுகையில், " தோனியின் அமைதி தான் போட்டியின் போது இருக்கும் சவால்களை எதிர்கொள்ள அவருக்கு உதவுகிறது. எந்த மாதிரி சூழ்நிலையாக இருந்தாலும் அதை எப்படி சமாளிக்க வேண்டும் என்பது தோனிக்கு தெரியும்" என தெரிவித்துள்ளார்.

Advertisment

இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் தோனி சிறப்பான ஃபார்மில் இருந்ததால் உலகக்கோப்பையில் அவரது அதிரடி தொடரும் என ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.