ADVERTISEMENT

தாஹிரின் மாயாஜால சுழல்... ராபாடாவின் மின்னல் வேக பவுலிங்...

10:22 AM May 15, 2019 | santhoshb@nakk…

டி20 போட்டிகளில் பெரும்பாலும் பேட்ஸ்மேன்களின் ஆதிக்கம் அதிகமாக இருக்கும். இந்த முறையும் தோனி, ரஸ்ஸல், ஹார்திக் பாண்டியா உள்ளிட்டோரின் அதிரடியில் சிக்ஸர்களும், பவுண்டரிகளும் பறந்தன. ஆனால் அதையும் தாண்டி இந்த முறை பவுலர்கள் தான் இந்த தொடரில் அதிக வெற்றிகளை தீர்மானித்துள்ளனர். மும்பை அணியும், சென்னை அணியும் இந்த சீசனில் வெற்றி பெற அந்த அணிகளின் பவுலர்களே அதிக பங்கு வகித்துள்ளனர். இந்த ஐபிஎல் தொடரில் 60 போட்டிகளில் மொத்தமாக 4934 டாட் பால்கள், 682 விக்கெட்கள்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

சன் ரைசர்ஸ் அணியின் நபி டெத் ஓவர்களில் 10 ஓவர்கள் பவுலிங் செய்து 4.50 எகானமி ரேட் வைத்துள்ளார். ராஜஸ்தான் அணியின் இளம் வீரர் ஆர்ச்சர் 16 ஓவர்கள் டெத் பவுலிங்கில் எகானமி ரேட் 4.75 வைத்துள்ளார். கொல்கத்தா அணியின் சுனில் நரைன் 15 ஓவரில் எகானமி ரேட் 5.06.

பவர் ப்ளே ஓவரில் தீபக் சஹார் 14 விக்கெட்கள், 7.47 எகானமி ரேட் கொண்டுள்ளார். மிடில் ஓவரிகளில் தாஹிர் 22 விக்கெட்கள், 6.69 எகானமி ரேட் வைத்துள்ளார். டெத் ஓவர்களில் டெல்லி அணியின் ராபாடா 17 விக்கெட்கள், 7.82 எகானமி ரேட் கொண்டு சிறப்பாக பவுலிங் செய்துள்ளனர்.

ராஜஸ்தான் அணியின் இளம் லெக் ஸ்பின்னர் ஸ்ரேயாஸ் கோபால் இந்த ஆண்டு சிறப்பாக பவுலிங் செய்துள்ளார். கோலி, டி வில்லியர்ஸ், ரோகித் சர்மா என சிறந்த பேட்ஸ்மேன்களின் விக்கெட்கள் எடுத்து கலக்கியுள்ளார். 5 முறை கேப்டன்களை டிஸ்மிஸ் செய்துள்ளார். கோலியை இரு முறை வீழ்த்தியுள்ளார். மும்பை கேப்டன் சர்மா, டெல்லி கேப்டன் ஐயர், ஹைதராபாத் கேப்டன் வில்லியம்சன் ஆகியோரை ஒரு முறை அவுட் செய்துள்ளார்.

இந்த தொடரில் அதிக சிக்ஸர்கள் கொடுத்த பவுலர்களில் ஹார்திக் பாண்டியா முதலிடத்தில் உள்ளார். 255 பந்துகளில் 23 சிக்ஸர்கள் கொடுத்துள்ளார். அடுத்து உனட்கட் 224 பந்துகளில் 22 சிக்ஸர்கள், சாஹல் 296 பந்துகளில் 22 சிக்ஸர்கள், சாவ்லா 267 பந்துகளில் 21 சிக்ஸர்கள் கொடுத்துள்ளனர்.

சென்னை அணியின் சுழற்பந்து வீச்சாளர் தாஹிர் இந்த தொடரில் 26 விக்கெட்கள் எடுத்து ஊதா நிற தொப்பியை பெற்றார். இதற்கு முன்பு கொல்கத்தா அணியின் ஸ்பின்னர்களில் சுனில் நரைன் அதிகபட்சமாக 24 விக்கெட்கள் எடுத்தது தான் அதிகம். அந்த சாதனையை தாஹிர் முறியடித்துள்ளார்.

சென்னை அணியின் தீபக் சஹார் 17 போட்டிகளில் 190 டாட் பால்கள் வீசியுள்ளார். டெல்லி அணியின் ரபாடா அதிவேகமாக 154.23 கி.மீ வேகத்தில் பவுலிங் செய்துள்ளார்.

அதிக மெய்டன் ஓவர்கள் வீசியதில் ராஜஸ்தான் அணியின் ஆர்ச்சர் மற்றும் தீபக் சஹார் ஆகியோர் தலா இரண்டு ஓவர்கள் வீசியுள்ளனர். ஒட்டுமொத்தமாக 20 மெய்டன் ஓவர்கள் வீசப்பட்டுள்ளது. குறைந்த எகானமி ரேட்டாக 6.28 கொண்டு ரசித் கான் கலக்கியுள்ளார்.

சென்னை அணியின் பவுலிங் யூனிட் சென்ற ஆண்டை விட இந்த ஆண்டு சிறப்பாக செயல்பட்டுள்ளது. சென்ற ஆண்டு 99 விக்கெட்கள், பவுலிங் சராசரி 27.78, 8.72 எகானமி ரேட் வைத்திருந்தனர். இந்த ஆண்டு 111 விக்கெட்கள், பவுலிங் சராசரி 21.98, எகானமி ரேட் 7.47.

இந்த தொடரில் ஸ்பின்னர்கள் 263 விக்கெட்கள் எடுத்துள்ளனர். இதற்கு முன்பு 2011-ஆம் ஆண்டு 266 விக்கெட்கள் எடுத்தது தான் அதிகம். ஆனால் அந்த தொடரில் 13 போட்டிகள் அதிகமாக விளையாடியிருந்தது. 41% விக்கெட்களை ஸ்பின்னர்கள் எடுத்துள்ளனர்.

ஸ்பின்னர்களில் சென்னை அணியின் ஸ்பின்னர்கள் இந்த சீசனில் அதிகபட்சமாக 62 விக்கெட்கள் எடுத்துள்ளனர். இது ஐபிஎல் தொடரில் சாதனையாகும். இந்த ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணி மொத்தமாக 56 விக்கெட்கள் மட்டுமே எடுத்துள்ளது. இதுவரை ஐபிஎல் வரலாற்றில் ஒரு அணி எடுத்த குறைந்தபட்ச விக்கெட்கள் இது. இதற்கு முன்பு கொல்கத்தா அணி 2009-ஆம் ஆண்டு 59 விக்கெட்கள் எடுத்திருந்தது.

இந்த தொடரில் பஞ்சாப் அணியின் முஜீப் உர் ரஹ்மான் 4 ஓவரில் 66 ரன்கள் கொடுத்தது ஒரே போட்டியில் ஒரு வீரர் கொடுத்த அதிகபட்ச ரன்கள். ஐபிஎல் வரலாற்றில் சிறந்த பவுலிங்காக மும்பை அணியின் அல்ஜாரி ஜோசப் 12 ரன்கள் கொடுத்து 6 விக்கெட்கள் எடுத்துள்ளார். ராஜஸ்தான் அணியின் கோபால் மற்றும் பஞ்சாப் அணியின் சாம் கரன் ஆகியோர் தலா ஒரு முறை ஹாட்ரிக் விக்கெட்கள் எடுத்துள்ளனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT