Advertisment

கடைசி பந்தில் பவுண்டரி; பஞ்சாப் த்ரில் வெற்றி

A boundary off the last ball; Punjab Thrill win

சென்னை சேப்பாக்கத்தில் நடந்த ஐபிஎல் போட்டியில் இன்று பஞ்சாப் கிங்ஸ் அணி த்ரில் வெற்றி பெற்றது.

Advertisment

நடப்பு ஐபிஎல் சீசனின் 41 ஆவது லீக் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று நடைபெற்றது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. இன்றையபோட்டியில்சென்னை அணியை நான்கு விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி வீழ்த்தியது. முதலில் விளையாடிய சென்னை அணி 20 ஓவர் முடிவில் நான்கு விக்கெட் இழப்புக்கு 200 ரன்கள் எடுத்தது. 19.5 ஓவரில் 198ரன்கள் எடுத்திருந்த நிலையில் பஞ்சாப் அணி கடைசி பந்தில் 3 ரன்கள் எடுத்ததன் மூலமாக 201 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

Advertisment

சென்னை அணியில் அதிகபட்சமாக கான்வே 92 ரன்களும், ருத்ராஜ்கெய்க்வாட் 37 ரன்களும், ஷிவம் துபே 28 ரன்கள் எடுத்தனர். பஞ்சாப் அணியில் பிரப்சிம்ரான் சிங் 42 ரன்களும், லிவிங்ஸ்டன் 40 ரன்களும், சாம் கரண் 20 ரன்களும், ஷிகர் தவான் 28 ரன்கள் எடுத்தனர். சென்னை அணியில் அதிகபட்சமாக துஷார் தேஷ்பாண்டே மூன்று விக்கட்டுகளும், ஜடேஜா இரண்டு விக்கெட்களும் வீழ்த்தினர். பஞ்சாப் அணியில் அர்தீப் சிங், சாம் கரண், ராகுல் சாஹர், சிக்கந்தர் ரஸா தலா ஒரு விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

Dhoni CSK cricket IPL Punjab
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe