Advertisment

டிவில்லியர்ஸுக்குப் பதில் இவருக்கு ஆட்ட நாயகன் விருது கொடுத்திருக்கலாம் - பென் ஸ்டோக்ஸ் பதிவு! 

Ben Stokes

Advertisment

13-வது ஐ.பி.எல் தொடரின் 28-வது லீக் போட்டி நேற்று இரவு ஷார்ஜாவில் நடைபெற்றது. இப்போட்டியில் கொல்கத்தா அணி பெங்களூரு அணியை எதிர்கொண்டது. டாஸ் வென்று முதலில் பேட் செய்த பெங்களூரு அணி 20 ஓவரின் முடிவில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 194 ரன்கள் குவித்தது. 195 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா அணி 20 ஓவரின் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 112 ரன்கள் குவித்தது. பெங்களூரு அணி 82 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அதிரடியாக விளையாடி 33 பந்துகளில் 73 ரன்கள் குவித்த டிவில்லியர்ஸுக்கு 'ஆட்டநாயன்' விருது வழங்கப்பட்டது.

இந்நிலையில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர் பென் ஸ்டோக்ஸ் தன்னுடைய ட்விட்டர் பதிவில், "ஆட்டநாயகன் விருது யுகேந்திர சாஹலுக்கு கொடுத்திருக்க வேண்டும். சிறப்பான பந்துவீச்சு" எனப் பதிவிட்டுள்ளார்.

யுகேந்திர சாஹல் நான்கு ஓவர்கள் பந்துவீசி 12 ரன்கள் விட்டுக்கொடுத்து ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினார். இது கொல்கத்தா அணியின் ரன்வேகத்தை பெரிதும் கட்டுப்படுத்த உதவியது என்பது குறிப்பிடத்தக்கது.

Ben stokes IPL
இதையும் படியுங்கள்
Subscribe