Advertisment

இந்திய அணிகளுக்கான புதிய கிட் ஸ்பான்சர்! பிசிசிஐ அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

bcci

Advertisment

இந்திய கிரிக்கெட் அணிகளுக்கான புதிய கிட் ஸ்பான்ஸராக எம்.பி.எல். ஸ்போர்ட்ஸ்(MPL SPORTS) நிறுவனம் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, நவம்பர் 2020 முதல் டிசம்பர் 2023 வரை என மூன்று ஆண்டு காலத்திற்கு இந்நிறுவனம் இந்திய அணிகளுக்கான கிட் ஸ்பான்ஸராக செயல்பட உள்ளது.

இந்திய பெண்கள் அணி மற்றும் 19 வயதிற்கு உட்பட்டோர் அணிக்கான கிட் ஸ்பான்ஸராகவும் எம்.பி.எல். ஸ்போர்ட்ஸ் நிறுவனம் செயல்படும் என பிசிசிஐ வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. மேலும், இந்திய அணியின் ஜெர்சி மற்றும் கிரிக்கெட் சார்ந்த பிற பொருட்களை ரசிகர்களுக்கு விற்பனை செய்யும் உரிமையும் இந்நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.

வரும் நவம்பர் 27-ம் தேதி சிட்னியில் தொடங்க இருக்கிற இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான ஒருநாள் போட்டியிலிருந்து இந்த ஒப்பந்தம் அமலுக்கு வரவிருக்கிறது.


indian cricket bcci
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe