Advertisment

தோல்விக்கு பின் பிசிசிஐ எடுத்த அதிரடி முடிவு!!! தலைமை பயிற்சியாளரை...

உலகக் கோப்பையில் இந்திய அணி தோல்வியுற்ற பிறகு பல அதிரடி மாறுதல்கள் நிகழும் என்ற தகவல்கள் தொடர்ந்து வெளிவந்த வண்ணம் உள்ளன.

Advertisment

bcci

இந்நிலையில் தற்போது பிசிசிஐ ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, இந்திய அணிக்கான ஹெட் கோச், பேட்டிங் கோச், பௌலிங் கோச், ஃபீல்டிங் கோச், ஃபிசியோதெரபிஸ்ட், ஸ்ட்ரென்த் மற்றும் கண்டிஷனிங் கோச் மற்றும் அட்மினிஷ்ட்ரேடிவ் மேனேஜர் ஆகிய பணிகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன என்று கூறியுள்ளது.

Advertisment

தற்போது தலைமை பயிற்சியாளராக உள்ள ரவிசாஸ்திரி விரைவில் மாற்றப்படுவார் என தகவல்கள் வெளியாகின. தற்போது தலைமை பயிற்சியாளருக்கான விண்ணப்பங்களும் வரவேற்கப்படுவதால் அது உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதுதவிர இந்திய அணிக்குள்ளும் சில மாற்றங்கள் நிகழவிருப்பதாக கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Ravi Shastri icc worldcup 2019 India bcci
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe