/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/43_13.jpg)
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 ஒருநாள், 3 இருபது ஓவர், 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இரு அணிகளுக்கும் இடையேயான முதல் ஒருநாள் போட்டி வரும் 27-ஆம் தேதி சிட்னியில் தொடங்குகிறது. ஒருநாள் தொடர் நிறைவு பெற்றதும், இரு அணிகளுக்கும் இடையேயான இருபது ஓவர் போட்டி டிசம்பர் 4-ஆம் தேதி தொடங்கவிருக்கிறது .
ஐ.பி.எல் தொடரில் ஹைதராபாத் அணிக்காக விளையாடி அபார ஆட்டத்தை வெளிப்படுத்தியதையடுத்து, இருபது ஓவர் போட்டிகளுக்கான இந்திய அணியில் நடராஜனுக்கு வாய்ப்பு கிடைத்தது. தற்போது இந்திய வீரர்கள் ஆஸ்திரேலியாவில் முகாமிட்டு வலைப்பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். வலைப்பயிற்சியின் போது இந்தியவீரர்களுக்கு நடராஜன் பந்துவீசும் காணொளியை பி.சி.சி.ஐ தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.
வேகம் குறைவான இந்திய மைதானங்களிலேயே துல்லியமாக யார்க்கர் வீசி கணிசமான விக்கெட்டுகளைக் கைப்பற்றியதால், வேகப்பந்துவீச்சுக்கு உகந்த ஆஸ்திரேலிய மைதானங்களில் நடராஜனின் செயல்பாடு எப்படி இருக்கும் என்பது குறித்த எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது.
Follow Us