ganguly

Advertisment

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவரான கங்குலிக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. மேலும் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

மேலும் கங்குலியின் உடல்நிலை தற்போது சீராக இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த வருடத்தின் தொடக்கத்தில் கங்குலிக்கு மாரடைப்பு ஏற்பட்டது. அதன்காரணமாக அவருக்கு ஆஞ்சியோபிளாஸ்டிசிகிச்சை செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.