Advertisment

தனிமைப்படுத்தப்பட்ட டெல்லி அணி: ஐபிஎல் தொடரில் புதிய மாற்றம்?

lockdown

இந்தியாவில் கரோனாபாதிப்பு மோசமடைந்துள்ளது. அதேவேளையில் ஐபிஎல் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. வீரர்களுக்கு கரோனாதொற்று ஏற்படாமல் இருக்க, அவர்களுக்குப் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் கூடிய கரோனாபாதுகாப்பு வளையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்தப் பாதுகாப்பு வளையத்தை தாண்டி வெளியே எங்கும் செல்ல ஐபிஎல்லில் விளையாடும்வீரர்களுக்கு அனுமதியில்லை.

Advertisment

இருப்பினும், இந்தப் பாதுகாப்பு வளையத்தை தாண்டி, கொல்கத்தா அணி வீரர்கள் வருண் சக்கரவர்த்தி மற்றும் சந்தீப் வாரியார், சென்னை அணியின் தலைமைச் செயல் அதிகாரி காசி விஸ்வநாதன், பந்துவீச்சுப் பயிற்சியாளர் பாலாஜி ஆகியோருக்கும், பேருந்து கிளீனர் ஒருவருக்கும் கரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.

Advertisment

இதனையடுத்துகொல்கத்தா -பெங்களூர் அணிகளுக்கிடையேயான போட்டி ஒத்திவைக்கப்பட்டது. மேலும், கொல்கத்தா அணியுடன் கடைசியாக விளையாடிய டெல்லி கேபிட்டல்ஸ் அணி தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், டெல்லி கோட்லா மைதான ஊழியர்களுக்கு கரோனாஉறுதி செய்யப்பட்டுள்ளது. கரோனா உறுதியான மைதான ஊழியர்கள் யாரும் கடந்த இரண்டு போட்டிகளின்போது பணியில் இல்லை என கோட்லா மைதான நிர்வாகம் விளக்கமளித்துள்ளது.

இருப்பினும், டெல்லியில் நிலவி வரும் மோசமான சூழலும், மைதான ஊழியர்களுக்கு கரோனா உறுதியானதும் ஐபிஎல் அணிகளுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. அதேநேரத்தில்ஐபிஎல் போட்டிகளை மும்பையில் நடத்த இந்திய கிரிக்கெட் வாரியம் ஆலோசித்து வருகிறது. இந்த ஐபிஎல் தொடரில் ஏற்கனவே மும்பையில்போட்டிகள் நடத்தப்பட்டன. அப்போது எந்த வீரருக்கும் கரோனாபாதிப்பு ஏற்படாததும், மும்பையில் மூன்று கிரிக்கெட் மைதானங்கள் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

ipl 2021 bcci Mumbai corona virus
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe