Advertisment

மேற்கிந்திய தீவுகள் உடனான தொடரிலிருந்து தோனி விலகல்- பிசிசிஐ அதிகாரி தகவல்...

சமீபத்தில் நடந்து முடிந்த கிரிக்கெட் உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி லீக் போட்டிகளில் சிறப்பாக விளையாடி முதலிடத்தை பிடித்திருந்தது. ஆனால், அரையிறுதி போட்டியில் நியூசிலாந்து அணியிடம் தோல்வியடைந்து தொடரைவிட்டு வெளியேறியது.

Advertisment

bcci official about dhonis place in west indies series

இதனை தொடர்ந்து இந்திய அணி அடுத்தடுத்து இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிக்க முடிவு செய்துள்ளதாகவும், விரைவில் தோனி ஓய்வை அறிவிப்பார் எனவும் செய்திகள் வெளியாகின.

இந்நிலையில் இதுகுறித்து பிடிஐ செய்தி நிறுவனத்திடம் பேசியுள்ள பிசிசிஐ அதிகாரி ஒருவர் கூறுகையில், "தோனி மேற்கிந்திய தீவுகள் அணியுடனான தொடரிலிருந்து விலகிக்கொள்வதாக அறிவித்துள்ளார். சிறிது காலம் ஓய்வெடுக்க விரும்புவதாக தெரிவித்த அவர், அடுத்த சில மாதங்கள் இந்திய ராணுவத்தில் தனது பணியை தொடர விரும்புவதாக கூறியுள்ளார்" என கூறினார். எனவே வரும் மேற்கிந்திய தீவுகள் தொடரில் பங்கேற்காமல் அதற்கு பதிலாக தோனி, பாரா ரெஜிமெட்ண்ட் படையில் தனது பயிற்சி மற்றும் பணியை தொடர்வார் என தெரிகிறது...

Dhoni icc worldcup 2019 team india
இதையும் படியுங்கள்
Subscribe