Advertisment

தோனியின் வார்த்தைக்காக காத்திருக்கும் இந்திய கிரிக்கெட் வாரியம்..!

மான்செஸ்டரில் புதன்கிழமை நடந்த உலகக்கோப்பை கிரிக்கெட் அரையிறுதிப் போட்டியில் முதலில் பேட் செய்த நியூசிலாந்து அணி 50 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 239 ரன்கள் எடுத்தது. 240 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 49.3 ஓவர்களில் 221 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

Advertisment

bcci official about dhoni retirement

இந்திய அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சரியாக விளையாடாத நிலையில் ஜடேஜாவும், தோனியும் சிறப்பாக ஆடி அணியை வெற்றியின் விளிம்பு வரை கொண்டு சென்றனர். இருப்பினும் கடைசி ஓவர் வரை போராடி இந்திய அணி தோல்வியை தழுவியது.

Advertisment

இந்நிலையில் கூடிய விரைவில் தோனி தனது ஓய்வை அறிவிக்கலாம் என்ற தகவலும் பரவ ஆரம்பித்தது. இந்நிலையில் இதுகுறித்து பேசியுள்ள இந்திய கிரிக்கெட் வாரிய அதிகாரி ஒருவர், "உலகக் கோப்பை தொடரின் அரையிறுதியில் தோற்றதில் இருந்து அணி இன்னும் மீளவில்லை. வீரர்கள் இன்னும் இந்தியா திரும்பவில்லை. அதற்குள் தோனி பற்றி கேட்டால் என்ன சொல்வது? அவர் முடிவு குறித்து தெரியாது. ஆனால் அவரது வார்த்தைக்காக கிரிக்கெட் வாரியம் காத்திருக்கும்" என கூறியுள்ளார்.

Dhoni icc worldcup 2019 team india
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe