ASHWIN AND MITHALAI RAJ

இந்திய விளையாட்டுத் துறையில் வழங்கப்படும் மிக உயரிய விருதுராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது. ஆண்டுதோறும் வழங்கப்படும் இந்த விருதுக்கு கிரிக்கெட் வீரர் அஷ்வினையும், மகளிர் கிரிக்கெட் அணியின் ஒருநாள் மற்றும் டெஸ்ட் அணியின் கேப்டன் மித்தாலி ராஜையும் பரிந்துரைக்க இந்திய கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளதாகஅதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Advertisment

அதேபோல் சிறந்த விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்படும் அர்ஜுனா விருதுக்கு, கே.எல். ராகுல், ஜஸ்பிரிட் பும்ரா, ஷிகர் தவான் ஆகியோரைஇந்திய கிரிக்கெட் வாரியம் பரிந்துரைக்க உள்ளதாகவும் அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Advertisment

கடந்த ஆண்டு இந்திய கிரிக்கெட் வீரர் ரோகித் சர்மா, தமிழ்நாட்டைச் சேர்ந்த பாராஒலிம்பிக் வீரர் மாரியப்பன் தங்கவேலு ஆகியோருக்கு ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.