fgbhgf

Advertisment

இந்திய கிரிக்கெட் வீரர்களான ஹர்திக் பாண்டியா மற்றும் ராகுல் ஆகியோர் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பெண்களை பற்றி சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்ததால் சிக்கலில் மாட்டினர். இவர்களின் கருத்துக்கு நாடு முழுவதும் பலத்த எதிர்ப்பு எழுந்தது. இதனையடுத்து இவர்கள் இருவரும் கிரிக்கெட் போட்டிகளில் விளையாட பிசிசிஐ இடைக்கால தடை விதித்தது. இந்நிலையில் பாண்டியா மற்றும் ராகுல் ஆகியோர் தங்கள் தரப்பு கருத்துக்களை கூறி மன்னிப்பும் கேட்டனர். மேலும் நடந்த தவறுக்காக தொலைக்காட்சி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய பாலிவுட் இயக்குனர் கரண் ஜோகரும் தன வருத்தத்தை தெரிவித்தார்.இதனைத்தொடர்ந்து தற்போது பிசிசிஐ அவர்களுக்கு போட்டிகளில் விளையாட விதிக்கப்பட்டிருந்த இடைக்கால தடையை நீக்கியுள்ளதாக அறிவித்துள்ளது.