Skip to main content

எங்கு நடைபெறுகிறது ஐபிஎல் தொடர்? - தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வாரியத்துடன் பேச்சுவார்த்தை நடத்தும் பிசிசிஐ! 

Published on 25/01/2022 | Edited on 25/01/2022

 

ipl

 

2022ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் தொடரை வரும் ஏப்ரல் 2ஆம் தேதி தொடங்க பிசிசிஐ திட்டமிட்டிருந்த நிலையில், கரோனா பரவல் அதிகரிப்பு அத்திட்டத்தில் சிக்கலை ஏற்படுத்தியது. இதனையடுத்து ஒருவேளை ஐபிஎல் தொடரை இந்தியாவில் நடத்த முடியாவிட்டால் எங்கு நடத்துவது என்பது குறித்து ஐபிஎல் அணி உரிமையாளர்களுடன் பிசிசிஐ அண்மையில் ஆலோசனை நடத்தியது.

 

இந்த ஆலோசனை கூட்டத்தில், தென்னாப்பிரிக்கா, ஐக்கிய அரபு அமீரகம், மும்பை ஆகிய இடங்களில் ஐபிஎல் தொடரை நடத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டு இறுதியில், மும்பையில் ஐபிஎல் தொடரை முடிவு செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் மஹாராஷ்ட்ரா மாநிலத்தில் ஐபிஎல் தொடரை நடத்துவது குறித்து, அங்கு நிலவும் கரோனா சூழ்நிலையை கவனத்தில் கொண்டு பிப்ரவரி 20 ஆம் தேதி பிசிசிஐ இறுதி முடிவெடுக்கவுள்ளது.

 

இந்தநிலையில் ஐபிஎல் தொடரை தென்னாப்பிரிக்காவில் நடத்துவது தொடர்பாக, அந்தநாட்டு கிரிக்கெட் வாரியதுடன் இந்திய கிரிக்கெட் வாரியம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது. இந்த பேச்சுவார்த்தையின்போது, இந்திய கிரிக்கெட் வாரியம், அருகருகே இருக்கும் மைதானங்களில் போட்டிகளை நடத்துவது குறித்து ஆலோசித்ததாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அணிகளுக்கு ஏற்படும் செலவை குறைக்க, விமான பயணங்களை தவிர்க்கும் பொருட்டு அருகருகே உள்ள மைதானங்களில் நடத்த இந்திய கிரிக்கெட் வாரியம் விரும்புவதாகவும், தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் வாரியமும் ஜோகன்னஸ்பர்க் மற்றும் அதனை சுற்றி அருகருகே அமைந்துள்ள மைதாங்களில் போட்டியை நடத்தலாம் என கூறியுள்ளதாக அந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

 

மேலும் இந்த பேச்சுவார்த்தையின்போது, ஐக்கிய அரபு அமீரகத்தை விட தென்னாப்பிரிக்காவில் ஹோட்டல் வாடகையில் மலிவாக இருக்கும் என்பதை தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் சுட்டிக்காட்டியதாகவும் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

 

 

Next Story

12 வயது சிறுமியை சமய சடங்குகளோடு திருமணம் செய்த 63 வயது மதபோதகர்!

Published on 04/04/2024 | Edited on 04/04/2024
A 63-year-old priest who married a 12-year-old girl with religious rituals in africa

ஆப்பிரிக்கா நாடான கானாவின், நுங்குவா பகுதியில் குறிப்பிட்ட பிரிவைச் சேர்ந்த பூர்வகுடி மக்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதி மக்களுக்கு இதே பகுதியைச் சேர்ந்த நூமோ பார்கடே லாவே சுரு (63) என்பவர் மத போதகராக இருந்து வருகிறார். 

இந்த நிலையில், கடந்த மார்ச் 30ஆம் தேதி அன்று நுங்குவா பகுதியில் திருவிழா போன்ற ஒரு விழா நடைபெற்றுள்ளது. இந்த விழாவில், மதபோதகர் நூமோ பார்கடே, அதே பகுதியைச் சேர்ந்த 12 வயது சிறுமியை சமய சடங்குகளை முன்னிறுத்தி தனது பக்தர்களின் ஆசியோடும், வாழ்த்துகளோடும் பகிரங்கமாக திருமணம் செய்துள்ளார். இது தொடர்பான, புகைப்படங்கள் மற்றும் காணொளிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

மேலும், 12 வயது சிறுமியை, 63 வயது மதபோதகர் ஒருவர் திருமணம் செய்தது குறித்து பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இது குறித்து மதபோதகர் தரப்பில் தெரிவித்துள்ளதாவது, ‘அந்த சிறுமிக்கு 6 வயது இருக்கும்போதே தனது மனைவியாக மதபோதகர் தேர்வு செய்துவிட்டதாகவும், தற்போது நடைபெற்ற திருமணம் சமய சடங்கு சார்ந்த திருமணம் தான் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஆனால், இந்த விவகாரம் குறித்த விசாரணையில், அந்த சிறுமி மதபோதகரைக் கணவனாக ஏற்று குழந்தை பேறுக்கு தயார்ப்படுத்தப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டது. இதை அறிந்த போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பாதிக்கப்பட்ட சிறுமி மற்றும் அவரது தாயார் இருவரையும் பத்திரமாக மீட்டு பாதுகாப்பான இடத்தில் வைத்துள்ளனர். கானா நாட்டு சட்டப்படி, 18 வயது பூர்த்தி ஆனவர்கள் மட்டுமே திருமணம் செய்துகொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. 

Next Story

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர்; இந்திய அணி அறிவிப்பு!

Published on 13/01/2024 | Edited on 13/01/2024
Test series against England; Indian team announcement

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது. இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியா விளையாட உள்ளது. இதில் முதல் 2 போட்டிகளில் விளையாட உள்ள இந்திய அணி வீரர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

அதன்படி ரோஹித் ஷர்மா தலைமையிலான டெஸ்ட் அணியில் சுப்மன் கில், ஜெய்ஸ்வால், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கே.எல். ராகுல் (விக்கெட் கீப்பர்), கே.எஸ். பரத் (விக்கெட் கீப்பர்), துருவ் ஜூரெல் (விக்கெட் கீப்பர்), அஸ்வின், ஜடேஜா, அக்சர் படேல், குல்தீப் யாதவ், சிராஜ், முகேஷ் குமார், ஜஸ்பிரித் பும்ரா (துணை கேப்டன்), ஆவேஷ் கான் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.