Advertisment

தினேஷ் கார்த்திக் அணியில் தேர்ந்தெடுக்கப்பட இது தான் காரணம்- பிசிசிஐ விளக்கம்...

இங்கிலாந்தில் வரும் மே மாதம் இறுதியில் நடைபெற உள்ள உலகக் கோப்பைக் கிரிக்கெட் போட்டிக்கான 15 வீரர்கள் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

bcci explains why it went with dinesh kartik over rishab pant

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="1282094959"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கு கோலி தலைமையில் இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ஷிகர் தவான், ரோஹித் சர்மா, கோலி, தோனி, கே.எல்.ராகுல், கேதர் ஜாதவ், ஹர்திக் பாண்டியா, புவனேஸ்வர் குமார், சாஹல், குல்தீப், முகமது ஷமி, பும்ரா, ஜடேஜா, விஜய் சங்கர், தினேஷ் கார்த்திக், ஆகியோருக்கும் அணியில் இடம் பெற்றுள்ளனர்.

Advertisment

இந்நிலையில் ரிஷப் பந்த் தேர்ந்தெடுக்கப்படாமல் தினேஷ் கார்த்திக் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கான காரணத்தை பிசிசிஐ அறிவித்துள்ளது. இதுகுறித்து எம்.எஸ்.கே. பிரசாத் கூறுகையில், "தோனி காயமடைந்தால் அவருக்கு பதிலாக விக்கெட் கீப்பிங் செய்பவர் அதனை நன்கு செய்ய வேண்டும். முக்கியமான போட்டிகளில் அனுபவம் வாய்ந்தவராக இருந்தால் நன்றாக இருக்கும். எனவே தான் ரிஷப் பந்துக்கு பதிலாக தினேஷ் கார்த்திக் அணியில் எடுக்கப்பட்டார்" என கூறியுள்ளார்.

இந்த உலக கோப்பைக்கு தினேஷ் கார்த்திக் மற்றும் விஜய் சங்கர் என இரு தமிழர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Dhoni ICC icc worldcup 2019
இதையும் படியுங்கள்
Subscribe