Skip to main content

இங்கிலாந்து டெஸ்ட் தொடர்: இந்திய அணியில் இணையும் மூன்று வீரர்கள் யார்? - பிசிசிஐ அறிவிப்பு!

Published on 26/07/2021 | Edited on 26/07/2021

 

PRITHVI SHAW SKY

 

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் விளையாட இங்கிலாந்து சென்ற இந்திய அணி, அடுத்ததாக இங்கிலாந்திற்கு எதிராக டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இதற்கிடையே இந்தியத் தொடக்க ஆட்டக்காரர் சுப்மன் கில், ஆல்-ரவுண்டர் வாஷிங்டன் சுந்தர், வேகப்பந்து வீச்சாளர் ஆவேஷ் கான் ஆகியோர் காயம் காரணமாக இங்கிலாந்து தொடரிலிருந்து வெளியேறியுள்ளனர்.

 

இதனையடுத்து இங்கிலாந்தில் உள்ள இந்திய அணி நிர்வாகம் மாற்று வீரர்களைக் கேட்டதாகவும், இதனையடுத்து தற்போது இலங்கைக்கு எதிரான ஒருநாள் மற்றும் 20 ஓவர் தொடரில் விளையாடி வரும் ப்ரித்வி ஷா மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகியோர் இங்கிலாந்திற்கு எதிரான தொடரில் விளையாடும் இந்திய அணியில் இடம்பெறவுள்ளார்கள் எனத் தகவல்கள் வெளியாகின.

 

இந்நிலையில் ப்ரித்வி ஷா மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகிய இருவரும், இங்கிலாந்திற்கு எதிரான தொடரில் விளையாடும் இந்திய அணியில் இடம்பெறுவதாக இந்திய கிரிக்கெட் வாரியம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மேலும், மாற்று வீரராக இந்திய அணியுடன் சென்ற அபிமன்யு ஈஸ்வரன், தற்போது இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

 

சூர்யகுமார் யாதவ் மற்றும்  ப்ரித்வி ஷா இருவரும் உடனடியாக இங்கிலாந்து செல்வார்களா அல்லது இலங்கை அணியுடனான இருபது ஓவர் தொடர் முடிந்ததும் இங்கிலாந்து செல்வார்களா என்பது குறித்து இந்திய கிரிக்கெட் வாரியம் எந்த தகவலையும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

 

 

Next Story

இந்திய கிரிக்கெட் அணிக்கு புதிய கேப்டன்?

Published on 17/11/2023 | Edited on 17/11/2023

 

New captain for Indian cricket team?

 

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரில் இந்திய அணிக்கு புதிய கேப்டன் நியமிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

 

இந்திய அணி உலக கோப்பை தொடரில் விளையாடி வருகிறது. அரையிறுதியில் நியூசிலாந்தை வீழ்த்தியதன் மூலம் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. இறுதி போட்டியில் இந்தியா, ஆஸ்திரேலிய அணியை நவம்பர் 19ஆம் தேதி எதிர்கொள்ள உள்ளது. உலக கோப்பை முடிந்தவுடன் தொடர்ந்து இங்கேயே தங்கும் ஆஸ்திரேலிய அணி, அடுத்ததாக இந்தியாவுடன் ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட உள்ளது.

 

உலக கோப்பைக்கு முன்னர் இந்தியாவில் நடந்த வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டி20 தொடரில் இந்திய சீனியர் வீரர்களுக்கு ஓய்வு கொடுக்கப்பட்ட நிலையில், அந்த தொடருக்கு ஹர்திக் பாண்டியா கேப்டனாக நியமிக்கப்பட்டார். துணை கேப்டனாக சூர்யகுமார் நியமிக்கப்பட்டார். இனி டி20 தொடர்களுக்கு ஹர்திக் பாண்டியாவே கேப்டனாக நியமிக்கப்படுவார் என தகவல்கள் வெளியாகி இருந்தது. ஆனால் உலகக்கோப்பை தொடரில் வங்கதேசத்திற்கு எதிரான போட்டியில் பந்தை தடுக்க முயன்ற போது ஹர்திக் பாண்டியாவிற்கு முழங்காலில் காயம் ஏற்பட்டது. இந்த காயம் காரணமாக ஆட்டத்தின் பாதியிலே வெளியேறினார். தொடர்ந்து காயம் குணமாகாத நிலையில், தொடரில் இருந்தே வெளியேறினார். அவருக்கு பதிலாக பிரசித் கிருஷ்ணா சேர்க்கப்பட்டார்.

 

இந்நிலையில், உலக கோப்பை தொடர் முடிந்தவுடன் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான ஐந்து டி20 போட்டிகள் கொண்ட தொடர் நவம்பர் 23ஆம் தேதி முதல் ஆரம்பமாக உள்ளது. ஹர்திக் பாண்டியாவின் காயம் இன்னும் முழுமையாக குணமடையாத நிலையில், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரிலும், காயம் குணமாக இன்னும் இரண்டு மாத காலம் தேவைப்படுவதால் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக, தென்னாப்பிரிக்காவில் நடக்கும் மூன்று டி20 போட்டிகள் மற்றும் 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரிலும் விளையாட மாட்டார் என தகவல்கள் வெளியாகி உள்ளது.

 

இந்நிலையில் டி20 அணிக்கு யார் கேப்டனாக செயல்படப் போகிறார் என  எதிர்பார்ப்பு எழுந்தது. இந்த நிலையில், துணை கேப்டனாக இருந்த சூர்யகுமார் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான தொடரில் கேப்டனாக நியமிக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. 

 

 

Next Story

உலகின் நம்பர் 1 பேட்டருக்கு தொடரும் சோகம்; மீண்டெழுவாரா சூர்யா?

Published on 12/04/2023 | Edited on 12/04/2023

 

Tragedy continues for world's No. 1 batsman; Surya will come back?

 

கடந்த ஆண்டு கிரிக்கெட்டில், தனது கிரிக்கெட் வாழ்க்கையின் உச்சக்கட்ட ஃபார்மில் இருந்தவர் சூர்யகுமார் யாதவ். முன்னணி வீரர்களுக்கு அடுத்தபடியாக சூர்யகுமார் மைதானத்தில் நுழையும்போது ரசிகர்கள் கத்தும் சத்தம் முன்னணி வீரர்களுக்கு இணையாக இருந்தது. களமிறங்கிய சில போட்டிகளில் விளையாடி டி20 பேட்ஸ்மேன்களில் நம்பர் 1 ஆக உயர்ந்தார்.

 

மிகச் சிறப்பாக ஆடியவர் தற்போது சொதப்பி வரும் காரணம் மும்பை அணியை மட்டுமல்லாது ஒட்டு மொத்த ரசிகர்களுக்கும் ஏமாற்றமாகவே அமைந்துள்ளது. கடந்த 26 நாட்களில் 4 முறை ரன்கள் ஏதும் எடுக்காமல் சூர்யகுமார் யாதவ் வெளியேறியுள்ளார். நான்கு முறையும் இடது கை பந்துவீச்சாளர்களால் அவுட் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. மேலும் அவர் களமிறங்கிய முதல் பந்தில் இருந்தே பந்தை அடித்து ஆடத் துடிப்பதும் அவர் தனது விக்கெட்டை இழக்க முக்கியக் காரணமாக அமைந்ததுள்ளது.

 

ஓராண்டில் 1000 ரன்களை அடித்த முதல் இந்திய வீரர், உலகின் இரண்டாவது வீரர் என்ற சாதனைகளைப் படைத்த சூர்யகுமார் யாதவ், தற்போது தனது முதல் ரன்னை எடுப்பதற்குள் தனது விக்கெட்டை பறிகொடுப்பது முரண். பேட்டிங்கில் கலக்கிய அதேவேளையில் ஃபீல்டிங்கிலும் அசத்தி வந்தார் சூர்யகுமார் யாதவ். ஆனால் நேற்றைய ஆட்டத்தில் இரண்டு கேட்சுகளை விட்ட நிலையில் ஒரு பந்து அவரது கண்ணையும் பதம் பார்த்தது.

 

இந்தாண்டு இறுதியில் உலகக் கோப்பை நடைபெற இருக்கும் நிலையில் தற்போது வரை டி20 போட்டிகளில் நம்பர் 1 பேட்ஸ்மேனாக இருக்கும் சூர்யகுமார் உலகக் கோப்பைக்கான ஒருநாள் இந்திய அணியில் இடம்பெற வேண்டுமானால் மீண்டும் பழைய ஆட்டத்திற்கு மாறியாக வேண்டும். எஞ்சியுள்ள ஐபிஎல் ஆட்டங்களில் மீண்டும் ஃபார்முக்கு திரும்பும் பட்சத்தில் உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் சூர்யகுமார் இடம் பிடிப்பது நிச்சயம்.