Advertisment

பொது நிகழ்வில் விராட் கோலி, ரவி சாஸ்திரி- விளக்கம் கேட்கவிருக்கும் இந்திய கிரிக்கெட் வாரியம்!

virat - ravi shastri

Advertisment

இந்தியா - இங்கிலாந்திற்கெதிரானடெஸ்ட் தொடர் தற்போது இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. ஐந்து போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரில் இந்திய அணி தற்போது 2-1 என முன்னிலை வகிக்கிறது. இந்தச்சூழலில்இந்திய அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரிக்கு கரோனா உறுதி செய்யப்பட்டது.அதனைத்தொடர்ந்து அவருடன் தொடர்பில் இருந்த பந்து வீச்சு பயிற்சியாளர் பரத் அருணுக்கும், பீல்டிங் பயிற்சியாளர் ஸ்ரீதருக்கும் கரோனா உறுதியானது.

இந்தநிலையில்ரவிசாஸ்திரியும், விராட் கோலியும் கடந்த வாரத்தில், உரிய அனுமதியின்றி புத்தக வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டதாகவும், அந்த நிகழ்வு நடைபெற்ற அறையில் கூட்டம் இருந்ததாகவும் தகவல்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தால் ரவி சாஸ்திரி மற்றும் கோலி மீது இந்திய கிரிக்கெட் வாரியம் அதிருப்தியடைந்துள்ளதாகவும், இந்த சம்பவம் குறித்து இந்திய கிரிக்கெட் வாரியம் விசாரணை நடத்தவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

மேலும் உரிய அனுமதியின்றி நிகழ்வில் கலந்துகொண்டதுதொடர்பாக விராட் கோலி மற்றும் ரவி சாஸ்திரியிடம் இந்திய கிரிக்கெட் வாரியம் விளக்கம் கேட்கவுள்ளதாகவும் வெளியான தகவல்கள் தெரிவிக்கின்றன.

team india Ravi Shastri virat kohli
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe