இந்தியாவில்ஆண்டுதோறும்நடக்கும்கிரிக்கெட்திருவிழாவான ஐபிஎல்-லில் வழக்கமாக8 அணிகள்பங்கேற்கும். 2011 தொடரில்10 அணிகளும், 2012 மற்றும் 2013 ஆம் ஆண்டுகளில் 9 அணிகளும்பங்கேற்றன. அதன்பிறகு ஐபிஎல் போட்டிகள்8 அணிகளோடு நடைபெற்று வந்தது.
இந்தநிலையில், ஐபிஎல் தொடரில் மேலும் இரண்டு அணிகளைச் சேர்க்கஇந்திய கிரிக்கெட் வாரியத்தின் ஆண்டுக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. 2022 ஆம் ஆண்டு முதல் ஐபிஎல் தொடரில் 10 அணிகள்விளையாடும் என இந்தியகிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
எனவே, வரும் 2021 ஐபிஎல் எட்டு அணிகளுடன் மட்டுமேநடைபெறும். மேலும்குஜராத் மற்றும் கேரளாவைத் தலைமையிடமாகக் கொண்ட அணிகள், 2022 ஐபிஎல்-லில் இடபெறும் எனத் தகவல் வெளியாகிவுள்ளது.