Advertisment

 ஐபிஎல் 2025 போட்டி எப்போது?; வெளியான அறிவிப்பு!

BCCI announces schedule for IPL 2025

உலக அளவில் புகழ்பெற்ற கிரிக்கெட் தொடரான ஐ.பி.எல். டி20 தொடர் கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. அந்த வகையில், 2025ஆம் ஆண்டுக்காக 18வது சீசன் அடுத்த ஆண்டு ஐபிஎல் போட்டி நடைபெறவுள்ளது. இந்த ஐபிஎஸ் போட்டிக்கான மெகா ஏலம், கடந்தாண்டு நவம்பர் மாதம் சவுதி அரேபியாவில் நடைபெற்றது.

Advertisment

இந்த நிலையில், நடப்பு ஆண்டிற்கான இந்தியன் பிரீமியர் லீக் (ஐ.பி.எல்) கிரிக்கெட் அட்டவணை தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதில், மார்ச் 22ஆம் தேதி அன்று தொடங்கி இறுதிப் போட்டி மே 25 அன்று நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சீசனில் 13 மைதானங்களில் 74 போட்டிகள் நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது. மார்ச் 22ஆம் தேதியன்று நடைபெறும் முதல் போட்டியில், கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (கொல்கத்தா அணி) மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) ஆகிய அணிகள் மோதவிருக்கிறது.

Advertisment

அதனை தொடர்ந்து, மார்ச் 23ஆம் தேதியன்று, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH) மற்றும் ராஜஸ்தான் அணி (RR) ஆகிய அணிகள் ஹைதராபாத்தில் மோதவிருக்கிறது. இதையடுத்து, மாலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) மற்றும் மும்பை இந்தியன்ஸ் (MI) அணிகள், சென்னை சிதம்பரம் மைதானத்தில் மோதுகின்றன. மார்ச் 23, 28, 30, ஏப்ரல் 5, 8, 11, 14, 20, 25, 30 மற்றும் மே 3, 7, 12, 16 ஆகிய தேதிகளின் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் விளையாடவிருக்கிறது. குவாலிஃபயர் 1 போட்டி, மே 20 அன்றும், எலிமினேட்டர் போட்டி மே 21 அன்றும் ஐதராபாத்தில் நடைபெறுகிறது. குவாலிஃபர் 2 போட்டி மே 23ஆம் தேதியன்று கொல்கத்தாவில் நடைபெறுகிறது. ஐபிஎல் 2025 சீசனின் இறுதிப்போட்டி கொல்கத்தாவில் மே 25ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

bcci IPL
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe