ROHIT SHARMA

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான தொடரில் விளையாடும் இந்திய கிரிக்கெட் அணி, அடுத்ததாக இலங்கையுடன் இரண்டு டெஸ்ட் மற்றும் மூன்று டி20 போட்டிகளில் விளையாடவுள்ளது. இப்போட்டிகளுக்கான அட்டவணை ஏற்கனவே வெளியிடப்பட்டிருந்தது.

Advertisment

அதன்படி இந்தியாவும், இலங்கையும் முதலில் இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும், அதன்பின்னர் மூன்று இருபது ஒவர் போட்டிகளிலும் மோதவிருந்தன. இந்நிலையில் பிசிசிஐ இந்த அட்டவணையில் மாற்றம் செய்துள்ளது. அதன்படி இந்தியாவும், இலங்கையும் முதலில் மூன்று இருபது ஒவர் போட்டிகளிலும், அதனைத் தொடர்ந்து பகலிரவு டெஸ்ட் உட்பட இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும் விளையாடவுள்ளன.

Advertisment

ROHIT SHARMA

இரு அணிகளும் மோதும் இருபது ஓவர் தொடர் இம்மாதம் 24 ஆம் தேதி தொடங்குகிறது. அதனைதொடர்ந்து மார்ச் 4 ஆம் தேதி இரு அணிகளும் மோதும் டெஸ்ட் தொடர் தொடங்கவுள்ளது. மார்ச் 12 ஆம் தேதி இந்தியா, இலங்கையிடையேயான பகலிரவு டெஸ்ட் போட்டி பெங்களூரில் நடைபெறவுள்ளது.