சினிமா நடிகருக்கு கட்டவுட் வைப்பது போன்று தல தோனிக்கு 36 அடி உயர கட்டவுட்...கேரளா ரசிகர்கள் கொண்டாட்டம்...

dhoni

மேற்கிந்திய தீவுகள் மற்றும் இந்தியாவுக்கு இடையேயான ஐந்து ஒரு நாள் போட்டி கொண்ட தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் இறுதி போட்டியான இன்று கேரளா திருவனந்தபுரம் க்ரீன்பீல்டு மைதானத்தில் நடைபெறுகிறது. இவ்விரு அணிகளும் இன்றைய போட்டியில் வெற்றிப்பெற கடுமையான பயிற்ச்சிகள் மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளனர். இந்த தொடரை 2க்கு 1 என்று இந்தியா முன்னணியில் உள்ளது.

இந்நிலையில், இந்த மைதானத்திற்கு வெளியே தல தோனியின் ரசிகர்கள் 36 அடி உயர கட்டவுட் வைத்து, கொண்டாடி வருகின்றனர். இந்த தொடரை அடுத்து நடைபெற உள்ள டி20 போட்டிகளில் தோனி சேர்க்கப்படாதது குறிப்பிடத்தக்கது.

Dhoni
இதையும் படியுங்கள்
Subscribe