bangalore won kolkata knight riders by 7 wicket

2025ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் 18வது சீசன் இன்று (22-03-25) கோலகலமாகத் தொடங்கியுள்ளது. கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்றும் வரும் இந்த போட்டியில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின.

இதில் டாஸ் வென்ற பெங்களூர் அணி பந்து வீச தீர்மானித்துள்ளது. அதன்படி, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் முதலில் களமாடி விளையாடியது. அதன்படி, அஜிங்க்யா ரஹானே 56 ரன்களும், சுனில் நரைன் 44 ரன்களும், ஆங்க்ரிஷ் ரகுவன்ஷி 30 ரன்களும் எடுத்தனர். இறுதியில், 20 ஓவர் முடிவில், 8 விக்கெட் இழப்பிற்கு கொல்கத்தா அணி 174 ரன்கள் எடுத்தது. இதில் பெங்களூர் அணி சார்பில், ஜோஷ் ஹேசில்வுட் 2 விக்கெட்டை எடுத்தார். குருனால் பாண்டியா 3விக்கெட்டை எடுத்து ஆட்டத்திற்கு வலு சேர்த்தார். யாஷ் தயாள், ரசிக் தார் சலாம் மற்றும் சுயாஷ் ஷர்மா ஆகியோர் தலா 1 விக்கெட்டுகளை எடுத்தனர்.

Advertisment

175 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கணக்கில், பெங்களூர் அணி பேட்டிங் செய்தது.அதில், பிலிப் சால்ட் 31 பந்துகளில் 9 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்சர்கள் அடித்து 56 ரன்கள் எடுத்தார். அடுத்ததாக, வந்த விராட் கோலி, 36 பந்துகளில் 4 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்சர்கள் அடித்து 59 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். ரஜத் படிதார் 16 பந்துகளில் 5 பவுண்டரிகள் மற்றும் 1 சிக்சர்கள் அடித்து 34 ரன்கள் அவுட்டானார். இறுதியில், ராஜஸ்தான் அணி 16.2 ஓவர் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 177 ரன்கள் எடுத்து கொல்கத்தா அணியை வீழ்த்தியது. ஐபிஎல் 2025ஆம் ஆண்டுக்கான முதல் போட்டியிலேயே, தனது முதல் வெற்றியை பெங்களூர் அணி பதிவு செய்துள்ளது.