16 ஆவது ஐபிஎல் சீசனின் 15 ஆவது லீக் போட்டியில் பெங்களூர் லக்னோ அணிகள் மோதின. இதில் பெங்களூர் அணி முதலில் பேட்டிங் செய்து 212 ரன்களை குவிக்க லக்னோ அணி அதை சேஸ் செய்து இறுதி பந்தில் வெற்றி பெற்றது.
இந்நிலையில் பெங்களூர் அணியின் கேப்டன் ஃபாஃப் டுப்ளசிக்கு 12 லட்சம் அபராதமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நிர்ணயித்த நேரத்திற்குள் பந்து வீசத்தவறியதற்காக இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாகத்தெரிவிக்கப்பட்டது.
மேலும், லக்னோ அணியின் பந்து வீச்சாளர் ஆவேஷ் கான், போட்டியில் வெற்றி பெற்ற உற்சாகத்தில் தனது ஹெல்மட்டை தூக்கி எறிந்தார். பின் அது குறித்து தவறை உணர்ந்து அதை ஏற்றுக்கொண்டதை அடுத்துஅவருக்கு எவ்வித அபராதமும் விதிக்கப்படவில்லை என ஐபிஎல் நிர்வாகம் கூறியுள்ளது.