bal

Advertisment

கால்பந்து வீரர்களுக்கு வழங்கப்படும் உயரிய விருதான பலோன் விருது வழங்கும் நிகழ்ச்சி நேற்று லண்டனில் நடைபெற்றது. இந்த விருதை கடந்த 2008 முதல் தொடர்ந்து பத்து ஆண்டுகளாக ரொனால்டோ மற்றும் மெஸ்ஸி இருவருமே மாற்றி மாற்றி பெற்று வந்தனர். இந்நிலையில் இந்த ஆண்டு குரோஷிய அணி வீரர் லூக்கா மோட்ரிக் இந்த விருதினை பெற்றுள்ளார். உலகக்கோப்பையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதற்காக ரசிகர்களால் பெருமளவு பாராட்டப்பட்டார் இவர். விருது பெற்ற பின் பேசிய இவர், விருதை பெற காரணமாக இருந்த பயிற்சியாளர், அணி நிர்வாகம் மற்றும் குடும்பத்தினருக்கு நன்றி தெரிவித்தார். பெண்கள் பிரிவிற்கான இந்த விருதை 23 வயது நிரம்பிய நார்வே வீராங்கனை அடா ஹெகெர்பேர்க் பெற்றார்.