bajrang punia

Advertisment

டோக்கியோ ஒலிம்பிக்ஸ் போட்டிகளில் இந்தியா இதுவரை ஐந்து பதக்கங்களை வென்றுள்ளது. பளுதூக்குதலில்மீராபாய் சானுவும், மல்யுத்தத்தில் ரவிக்குமார் தஹியாவும் வெள்ளிப் பதக்கங்களை வென்றுள்ளனர். பெண்களுக்கான குத்துச்சண்டையில் லோவ்லினாவும், பேட்மிண்டனில் சிந்துவும் வெண்கலப் புத்தகத்தை வென்றுள்ளனர். இந்திய ஆடவர் ஹாக்கி அணியும்வெண்கலத்தை வென்றுள்ளது.

இந்தநிலையில்இன்று நடைபெற்ற வெண்கல பதக்கத்திற்கான 65 கிலோ மல்யுத்த போட்டியில், இந்தியாவின்பஜ்ரங் புனியாவும்,கஜகஸ்தானின் தவுலத்நியாஸ்பேகோவும் மோதினர். இதில்பஜ்ரங் புனியா 8-0 எனதவுலத்நியாஸ்பேகோவைவீழ்த்தி வெண்கல பதக்கத்தை வென்றுள்ளார்.

இது டோக்கியோ ஒலிம்பிக்சில்இந்தியா வென்றுள்ள ஆறாவது பதக்கமாகும். இதுவரை இந்த ஒலிம்பிக்சில்இந்தியா இரண்டு வெள்ளி பதக்கங்களையும், 4 வெண்கலங்களையும் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.