
2023 ஐ.பி.எல் மினி ஏலம் கொச்சியில் இன்று பரபரப்பாக நடந்து வருகிறது. ஒவ்வொரு அணியின் உரிமையாளர்களும் தங்களது அணிக்கு வழு சேர்க்கத் திறமையான வீரர்களை இந்த ஐ.பி.எல் மினி ஏலத்தில் வாங்கி வருகின்றனர்.
சி.எஸ்.கே அணியில் எந்தெந்த கிரிக்கெட் வீரர்கள் இணைவார்கள் என்று பெரும் எதிர்பார்ப்பு சி.எஸ்.கே ரசிகர்களிடம் உள்ளது. இந்நிலையில், முன்னாள் இந்திய அணி மற்றும் சி.எஸ்.கே அணி வீரரான சுப்பிரமணியம் பத்ரிநாத், சி.எஸ்.கே அணிக்கு 3-வது பொசிசனுக்கு சில கிரிக்கெட் வீரர்கள் வர அதிக வாய்ப்பு உள்ளதாகக் கூறியுள்ளார்.
அவர் சொன்ன அந்த வீரர்கள், சி.எஸ்.கே ரசிகர்களால் சுட்டிக்குழந்தை என அழைக்கப்படும் இங்கிலாந்து அணியின் சாம் கரன் மற்றும் இங்கிலாந்து அணியின் நட்சத்திர வீரர் ஜோ ரூட் ஆக இருக்கலாம் என சுப்பிரமணியம் பத்ரிநாத் கணித்துள்ளார்.