Advertisment

பேபி சிட்டர் விளம்பரத்தால் கோபமான ஹெய்டன்...

Advertisment

வருகின்ற 24ஆம் தேதி ஆஸ்திரேலிய அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறது. இதனை மையப்படுத்தி இந்த போட்டியை ஒளிபரப்பும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம், சேவாக்கை வைத்து பேபி சிட்டர் விளம்பரத்தை எடுத்துள்ளது.

Advertisment

அண்மையில் இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 விதமான கிரிக்கெட் தொடர்களில் விளையாடியது. போட்டிகளின்போது இரு அணி வீரர்கள் இடையிலான ஸ்லெட்ஜிங் அதிக கவனம் பெற்றது.குறிப்பாக, இந்திய விக்கெட் கீப்பர் ரிஷப் பண்டை, ‘பேபி சிட்டர்’ என்று ஆஸ்திரேலிய கேப்டன் டிம் பெய்ன் கிண்டல் செய்தார்.

இந்த சம்பவத்தை மையபடுத்திதான் ‘பேபி சிட்டர்’விளம்பரம் எடுக்கப்பட்டுள்ளது. இதை பார்த்த ஆஸ்திரேலியாவின் முன்னாள் வீரர் மேத்திவ் ஹெய்டன் தன்னுடைய கண்டனத்தை ட்விட்டரில், “உங்களை எச்சரிக்கிறேன். ஆஸ்திரேலியர்களை ஒருபோதும் நகைச்சுவையாக எடுத்துக்கொள்ளாதீர்கள், விரு பாய். உலகக்கோப்பை யாரிடம் இருக்கிறது என கொஞ்சம் நினைத்துப் பாருங்கள்” என்று பதிவிட்டுள்ளார்.

mathew hayden baby sitter ad Shewag
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe