pant - msdhoni

உலகம் முழுவதும் பிரபலமான ஐ.பி.எல் தொடர், வரும் ஏப்ரல் 9ஆம்தேதி தொடங்கி நடைபெற இருக்கிறது. இதனையடுத்துவீரர்கள், தங்கள் அணியோடுஇணைந்து வருகின்றனர். மேலும் ஐபிஎல் அணிகள், தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன.

Advertisment

நடக்கவிருக்கும் ஐபிஎல் தொடரின் இரண்டாவது போட்டி, ஏப்ரல் 10ஆம் தேதிமும்பையில் நடக்கவிருக்கிறது. இந்தப் போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் - டெல்லி கேபிட்டல்ஸ் அணிகள் மோதவுள்ளன. இந்தநிலையில், மும்பையில் ஆடுகள பராமரிப்பாளர்கள் 8 பேருக்கு கரோனாஉறுதியானது. இதனைத் தொடர்ந்து தற்போது டெல்லி கேபிட்டல்ஸ் அணிக்காக விளையாடும் இந்திய கிரிக்கெட் வீரர் அக்ஸர் படேலுக்கு கரோனாஉறுதியாகியுள்ளது.

இதனையடுத்துஅக்ஸர் படேல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். ஏற்கனவே மஹாராஷ்ட்ராவில் கரோனாஅதிகரித்து வரும் நிலையில், கிரிக்கெட் வீரருக்கு கரோனாஉறுதியாகியிருப்பதுபரபரப்பைக் கிளப்பியுள்ளது. மேலும் மஹாராஷ்ட்ராவில் ஊரடங்கு விதிப்பது குறித்து இரண்டு நாட்களில் அறிவிக்கப்படும் என அம்மாநில முதல்வர் தெரிவித்துள்ளார். இதனால் சென்னை - டெல்லி அணிகள் மோதும் போட்டி திட்டமிட்டபடி நடைபெறுமா என சந்தேகம் எழுந்துள்ளது.

Advertisment