Advertisment

பாராஒலிம்பிக்ஸில் வரலாறு படைத்த அவனி லெகாரா!

avnani lekhara

ஒலிம்பிக்ஸ் போட்டிகளைத் தொடர்ந்து, மாற்றுத்திறனாளிகளுக்கானபாரா ஒலிம்பிக்ஸ் போட்டிகள் கடந்த 24ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகின்றன. இதில் இதுவரை இந்தியாவின்பவினாபென் படேல், மகளிருக்கான கிளாஸ் 4 டேபிள் டென்னிஸ் போட்டியில் வெள்ளி பதக்கம் வென்று சாதனை படைத்தார்.

Advertisment

ஈட்டி எறிதல் போட்டியில் இந்தியாவின் தேவேந்திரா, சுந்தர் சிங் குர்ஜார் ஆகியோர் முறையே வெள்ளி மற்றும் வெண்கல பதக்கங்களை வென்று அசத்தினர். இந்நிலையில், இன்று மகளிர் துப்பாக்கி சுடுதல் 10 மீட்டர் ஏர் ரைஃபிள் போட்டியில்அவனி லெகாரா தங்கப்பதக்கத்தை வென்று சாதித்துள்ளார்.

Advertisment

பாராஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனைஎன்ற மகத்தான சாதனையையும்அவனி லெகாராபடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. அதேபோல் வட்டு எறிதல் போட்டியில் இந்திய வீரர் யோகேஷ் கதூனியா வெள்ளி பதக்கம் வென்று அசத்தியுள்ளார். இதற்கிடையேஸ்வரூப் உன்ஹல்கர்10 மீட்டர் ஏர் ரைஃபிள் போட்டியில் இறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

paralympics avani lekhra
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe