india

இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான தொடருக்கு ஆஸ்திரேலிய அரசு அனுமதி வழங்கியுள்ளது.

Advertisment

இந்திய கிரிக்கெட் அணி வரும் நவம்பர் மாதம் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 டெஸ்ட், 3 ஒருநாள், 3 இருபது ஓவர் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட இருக்கிறது. தற்போது ஐபிஎல் தொடருக்காக அமீரகத்தில் முகாமிட்டுள்ள இந்திய வீரர்கள், இத்தொடர் முடிந்ததும் அங்கிருந்து ஆஸ்திரேலிய செல்ல இருக்கின்றனர். கரோனா அச்சுறுத்தல் நிறைந்த சூழலாக இருப்பதால், சிட்னியில் இந்திய அணி வீரர்களை தனிமைப்படுத்தவும்,பின் பயிற்சி மேற்கொள்ள அனுமதிப்பது எனவும் இருநாட்டு கிரிக்கெட் வாரியங்கள் திட்டமிட்டுள்ளன. தற்போது, ஆஸ்திரேலிய அரசு இதற்கு அனுமதி வழங்கியுள்ளது.

Advertisment

இன்னும் ஓரிரு நாளில் ஆஸ்திரேலியா தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.