/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/KL35.jpg)
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து விலகினார் கே.எல்.ராகுல்.
பயிற்சியின்போது இடதுகையில் காயம் ஏற்பட்டதால் இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி பேட்ஸ்மேன் கே.எல்.ராகுல், இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான டெஸ்ட் தொடரில் இருந்து விலகினார். இந்தியா - ஆஸ்திரேலியா இடையே இன்னும் இரண்டு போட்டிகளே உள்ள நிலையில் கே.எல்.ராகுல் தொடரில் இருந்து விலகியுள்ளார்.
ஏற்கனவே, உமேஷ் யாதவ், ஷமி ஆகியோர் காயம் காரணமாக ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் இருந்து விலகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டி சிட்னியில் வரும் ஜனவரி 7- ஆம் தேதி நடைபெறவுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)