Skip to main content

பயிற்சி ஆட்டத்தில் ஆஸ்திரேலியா முன்னிலை -ரஹானே, உமேஷ் யாதவ் அபாரம்

Published on 07/12/2020 | Edited on 07/12/2020
rahane

 

 

இந்திய கிரிக்கெட் அணி, தற்போது ஆஸ்திரேலியாவில் சுற்று பயணம் செய்து விளையாடி வருகிறது. ஒருநாள் போட்டி தொடர் முடிவடைந்த நிலையில், தற்போது இருபது ஓவர் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதனைத்தொடர்ந்தது டெஸ்ட் தொடர் நடைபெறவுள்ளது.

 

டெஸ்ட் தொடருக்கு தயாராகும் விதமாக இந்திய அணி, ஆஸ்திரேலியா ஏ அணியுடன் பயிற்சி ஆட்டத்தில் விளையாடி வருகிறது. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, தொடக்கத்திலேயே விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. தொடக்க ஆட்டக்காரர்களான ப்ரித்வி ஷா மற்றும் சுப்மன் கில் ஆகியோர் ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தனர். இருப்பினும், ரஹானேவின் அபார சதத்தாலும், புஜாராவின் நிதானமான அரைசதத்தாலும் இந்திய அணி 9 விக்கெட் இழப்பிற்கு 247 ரன்கள் எடுத்து  டிக்ளர் செய்தது.

 

இதனைத்தொடர்ந்து, ஆஸ்திரேலியா ஏ அணி தொடக்கம் முதலே தடுமாறியது. இருப்பினும் கேமேரான் க்ரீனின் சதத்தின் உதவியோடு இரண்டாம்நாள் ஆட்ட நேர முடிவில் 289 ரன்கள் குவித்து இந்திய அணியை விட 39 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. கிறிஸ் க்ரீன், 114 ரன்களோடு களத்தில் உள்ளார். இந்திய அணி தரப்பில் சிறப்பாக பந்து வீசிய உமேஷ் யாதவ், 3 விக்கெட்டுகளையும், சிராஜ் 2 விக்கெட்டுக்களையும், அஸ்வின் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

 

 

Next Story

WTC: மூன்றாம் நாள் ஆட்டம் முடிவு; முன்னிலையில் ஆஸ்திரேலியா

Published on 09/06/2023 | Edited on 09/06/2023

 

WTC: Third day's play ends; In the presence of Aussie

 

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி இங்கிலாந்தில் உள்ள ஓவல் மைதானத்தில் நடந்து வருகிறது. இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றன. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. 

 

தொடர்ந்து களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி தொடக்கத்தில் விக்கெட்களை இழந்தாலும் ஸ்டீவென் ஸ்மித் - ட்ராவிஸ் ஹெட் கூட்டணி சிறப்பாக ஆடி அணியின் ஸ்கோரை ஏற்றினர். முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய அணி அனைத்து விக்கெட்களையும் இழந்து 469 ரன்களைக் குவித்தது. அதிகபட்சமாக ட்ராவிஸ் ஹெட் 163 ரன்களையும் ஸ்டீவென் ஸ்மித் 121 ரன்களையும் எடுத்தனர். இந்திய அணி சார்பில் முகமது சிராஜ் 4 விக்கெட்களையும் முகமது ஷமி, ஷர்துல் தாக்கூர் தலா 2 விக்கெட்களையும் ரவீந்திர ஜடேஜா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.

 

தொடர்ந்து தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணி தொடர் தடுமாற்றத்துடனே ஆடியது. முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 296 ரன்களை மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக அஜிங்க்யா ரஹானே 89 ரன்களையும் ஷர்துல் தாக்கூர் 51 ரன்களையும் ரவீந்திர ஜடேஜா 48 ரன்களையும் எடுத்தனர். சிறப்பாக பந்து வீசிய ஆஸ்திரேலிய அணியில் பேட் கம்மின்ஸ் 3 விக்கெட்களையும் மிட்சல் ஸ்டார்க், ஸ்காட் போலண்ட், கேமரூன் க்ரீன் தலா 2 விக்கெட்களையும் நேதன் லயன் 1 விக்கெட்டையும் வீழ்த்தினர். இதன் மூலம் ஆஸ்திரேலிய அணி 173 ரன்கள் முன்னிலை பெற்றது.

 

தொடர்ந்து தனது இரண்டாவது இன்னிங்ஸை ஆடி வரும் ஆஸ்திரேலிய அணி மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில் 4 விக்கெட்களை இழந்து 123 ரன்களை எடுத்துள்ளது. அதிகபட்சமாக லபுசேன் 41 ரன்களையும் ஸ்டீவென் ஸ்மித் 34 ரன்களையும் எடுத்திருந்தனர். இந்திய அணி சார்பில் ஜடேஜா 2 விக்கெட்களையும் உமேஷ் யாதவ் மற்றும் முகமது சிராஜ் தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர். தற்போது ஆஸ்திரேலிய அணி 296 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. 

 


 

Next Story

WTC: எடுபடாத இந்திய பந்துவீச்சு; ஒருநாள் போட்டியாக்கிய ட்ராவிஸ் ஹெட்

Published on 08/06/2023 | Edited on 08/06/2023

 

WTC; Indian bowling not taken; Travis Head who played ODIs

 

இந்திய அணியின் ப்ளேயிங் 11ல் பல்வேறு குழப்பங்கள் இருந்து வந்த நிலையில் அஷ்வின் வெளியில் அமர்த்தப்பட்டுள்ளார். ஷர்துல் தாக்கூர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இந்திய அணியின் ப்ளேயிங் 11: ரோஹித் சர்மா, சுப்மன் கில், புஜாரா, விராட் கோஹ்லி, ரஹானே, ஸ்ரீகர் பரத், ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், உமேஷ் யாதவ், முகம்மது ஷமி, சிராஜ் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

 

டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. ஒடிசா மாநிலத்தில் நடந்த ரயில் விபத்தில் இதுவரை 288 பேர் உயிரிழந்த நிலையில் அவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாக இரு நாட்டு வீரர்களும் தங்களது கைகளில் கருப்பு பட்டை அணிந்து விளையாடி வருகின்றனர். ஆட்டத்தின் 3.4 ஓவர்களில் ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரர் கவாஜா சிராஜ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து ஆஸி அணி 71 ரன்களில் ஆடிக்கொண்டிருந்தபோது 43 ரன்களில் வார்னர் தனது விக்கெட்டை இழந்தார். சிறிது நேரத்தில் லபுசானேவும் தனது விக்கெட்டை பறிகொடுக்க ஆஸி அணி 76 ரன்களுக்கு 3 விக்கெட்களை இழந்து தடுமாறியது.

 

பின் இணைந்த ஸ்டீவ் ஸ்மித், ட்ராவிஸ் ஹெட் ஜோடி அணியை சரிவில் இருந்து மீட்டது. ட்ராவிஸ் ஹெட் ஒரு நாள் ஆட்டம் போல் ஆடி வெளிநாட்டு மண்ணில் தனது முதல் சதத்தை பதிவு செய்தார். முதல் நாள் முடிவில் ஆஸி அணி 3 விக்கெட்களை இழந்து 327 ரன்களை குவித்துள்ளது. அதிகபட்சமாக ட்ராவிஸ் ஹெட் 146 ரன்களும் ஸ்டீவ் ஸ்மித் 95 ரன்களும் எடுத்து ஆடி வருகிறார்கள். இந்திய அணி சார்பில் ஷமி, சிராஜ், ஷர்துல் தலா 1 விக்கெட்களை எடுத்தனர்.