ஆஸி.க்கு எதிரான இறுதி டி20: இலக்கை துரத்தும் இந்தியா! - முன்னணி வீரர் டக் -அவுட்!

wade

இந்தியா- ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான இருபது ஓவர்போட்டித்தொடர் தற்போது நடைபெற்றுவருகிறது. ஏற்கனவே, இரண்டு போட்டிகளைவென்று, இந்தியா தொடரைக்கைப்பற்றிய நிலையில், மூன்றாவது மற்றும் இறுதி 20 ஓவர் போட்டி தற்போது நடைபெற்று வருகிறது.

இப்போட்டியில் டாஸ் வென்றஇந்தியஅணியின் கேப்டன்விராட்கோலி, பந்து வீச்சைத் தேர்வு செய்தார். இதைத் தொடர்ந்து களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியில், அந்த அணியின் கேப்டனும், தொடக்கஆட்டக்காரருமான,பின்ச்டக்அவுட்டானார். இருப்பினும், மற்றொரு தொடக்கஆட்டக்காரர் மேத்யூவேட்டும், மேக்ஸ்வெல்லும் அதிரடியாக ஆடி அணியின்ஸ்கோரைஉயர்த்தினர்.

மேத்யூ வேட்53 பந்துகளில் 80 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். மேக்ஸ்வெல், 36 பந்துகளில் 54 ரன்கள்குவித்துநடராஜன்பந்தில்போல்டானர். இவர்கள் இருவரின் அதிரடியால், ஆஸ்திரேலியா அணி இருபது ஓவர்கள்முடிவில், 186 ரன்கள்குவித்து, இந்திய அணிக்கு187 ரன்களை இலக்காகநிர்ணயித்துள்ளது

இந்திய அணித்தரப்பில், வாஷிங்டன் சுந்தர்2 விக்கெட்டுகளையும், நடராஜன்மற்றும் ஷார்துல்தாக்குர்ஆகியோர்தலா ஒரு விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

தொடர்ந்து இந்தியஅணி, இலக்கைதுரத்தி வருகிறது. கே.எல்.ராகுல் டக்கவுட்டனார். ஷிகர்தவான்28 ரன்களில் ஆட்டமிழந்தார். இந்தியஅணி, தற்போது 9 ஓவர்களில் 74ரன்கள்எடுத்து ஆடிவருகிறது

indvsaus team india
இதையும் படியுங்கள்
Subscribe