india vs australia

Advertisment

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி,நான்காவது நாளான இன்றோடுமுடிவுக்குவந்தது. இந்தியஅணி கேப்டன்ரஹானேவின் சிறப்பானபேட்டிங்மற்றும் பும்ரா, அஸ்வின், சிராஜ்ஆகியோரின் சிறப்பானபந்து வீச்சால்இப்போட்டியில் இந்தியா, ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது.

'பாக்சிங் டே' போட்டியாகநடைபெற்றபோட்டியில்அடைந்ததோல்வியின் விரக்தியில்இருக்கும் ஆஸ்திரேலியாவிற்கு மேலும் ஒரு அடியாக, அந்த அணிக்குபோட்டி கட்டணத்திலிருந்து 40 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டதோடு, ஐசிசிடெஸ்ட்சாம்பியன்ஷிப் புள்ளிகளிலிருந்து 4 புள்ளிகளும் குறைக்கப்பட்டுள்ளது.

குறிப்பிட்ட நேரத்திற்குள் பந்து வீசி முடிக்காததேஇதற்குக்காரணம். ஐசிசிவிதிப்படி, குறிப்பிட்ட நேரத்திற்கு மேல் வீசப்படும்ஒவ்வொரு ஓவருக்கும், போட்டி கட்டணத்திலிருந்து 20 சதவீதஅபராதம் விதிக்கப்படுவதோடு, டெஸ்ட்சாம்பியன்ஷிப் புள்ளிகளிலிருந்து 2 புள்ளிகள் குறைக்கப்படும் என்பதுகுறிப்பிடத்தக்கது.