Advertisment

ஆஸ்திரேலியா ஆல் அவுட்; ஜடேஜா 5! - அசத்திய இந்தியா  

Australia All Out; Jadeja 5!

இந்திய அணியின் சிறப்பான பந்துவீச்சில் ஆஸ்திரேலியா ஆல் அவுட் ஆனது.

Advertisment

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடரில் பங்கேற்கிறது. இதற்காக இந்திய அணி வீரர்கள் நாக்பூரில் தீவிரமாக பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இங்கிலாந்து - ஆஸ்திரேலியா மோதும் ஆஸிஸ் தொடர் போன்று, சமீப காலங்களில் அதிக கவனம் பெற்று வரும் டெஸ்ட் தொடர் பார்டர் கவாஸ்கர் கோப்பை. 2023ம் ஆண்டுக்கான பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடர் இன்று நாக்பூரில் தொடங்கியது.

இதில் இந்திய அணி அனைவரும் எதிர்பார்த்தது போலவே இரு வேகப்பந்து வீச்சாளர்கள் மற்றும் மூன்று சுழற்பந்து வீச்சாளர்களுடன் களமிறங்கியது. சூர்யகுமார் யாதவ் மற்றும் ஸ்ரீகர் பரத் இந்த போட்டியின் மூலம் டெஸ்ட் போட்டியில் அறிமுகம் செய்யப்பட்டனர். நீண்ட இடைவேளைக்குப் பிறகு ஜடேஜா அணிக்கு திரும்பினார். இன்றைய போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடர்ந்து களமிறங்கிய அந்த அணியின்தொடக்க ஆட்டக்காரர்களான வார்னர் மற்றும் கவாஜா 1 ரன்னில் ஷமி மற்றும் சிராஜ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த லபுச்சானே மற்றும் ஸ்மித் நிலைத்து நின்று ரன்களை சேர்த்தாலும் ஜடேஜா அவர்கள் இருவரையும் வீழ்த்தி வெளியில் அனுப்பினார்.

தொடர்ந்து அசத்திய ஜடேஜா முதல் இன்னிங்ஸில் 5 விக்கெட்களை வீழ்த்தி அசத்தினார். மறுபுறம் கைகொடுத்த அஸ்வின் அவர் பங்கிற்கு 3 விக்கெட்களை வீழ்த்த, ஆஸ்திரேலிய அணி 177 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. ஆஸ்திரேலிய அணியில் அதிகபட்சமாக லபுசானே 49 ரன்களும் ஸ்மித் 37 ரன்களும் அலெக்ஸ் கேரி 36 ரன்களையும் எடுத்தனர். தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணியின்கேப்டன் ரோஹித் சர்மா 31 ரன்களுடன் ராகுல் 2 ரன்களுடன் விளையாடி வருகின்றனர். இந்திய அணி விக்கெட் இழப்பின்றி தற்போது வரை 31 ரன்களை எடுத்துள்ளது.

இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe