Skip to main content

தமிழக வீரர் ரஞ்சித் குமாருக்கு தயான்சந்த் விருது அறிவிப்பு...

Published on 21/08/2020 | Edited on 21/08/2020

 

athlete ranjith kumar gets dhyanchand award

 

தமிழகத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி தடகள வீரர் ரஞ்சித் குமாருக்கு இந்த ஆண்டுக்கான தயான்சந்த் விருது வழங்கப்பட உள்ளது. 

 

மத்திய அரசு சார்பில், ஆண்டுதோறும் சர்வதேச விளையாட்டு போட்டிகளில் சிறந்து விளங்கும் வீரர், வீராங்கனைகளுக்கு ‘ராஜீவ் காந்தி கேல் ரத்னா’, ‘அர்ஜூனா’, ஆகிய விருதுகளும், சிறந்த வீரர்களை உருவாக்கும் பயிற்சியாளர்களுக்கு ‘துரோணாச்சார்யா’ விருதும், விளையாட்டு வளர்ச்சிக்கு பங்களிக்கும் வாழ்நாள் சாதனையாளர்களுக்கு ‘தயான் சந்த்’ விருதும் வழங்கி கவுரவிக்கப்படுகிறது. அந்தவகையில் இந்த ஆண்டுக்கான ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது, அர்ஜூனா விருது யார்யாருக்கு வழங்கப்படுகிறது என்ற பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில், தமிழகத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி தடகள வீரர் ரஞ்சித் குமாருக்கு தயான்சந்த் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.  

 

 

Next Story

பிரபல விளையாட்டு வீரரின் வாழ்க்கை வரலாறு படமாகிறது!

Published on 17/12/2020 | Edited on 17/12/2020

 

Dhyan Chand

 

இந்தியாவைச் சேர்ந்த மறைந்த முன்னாள் ஹாக்கி வீரரான தயான் சந்த், ஹாக்கி விளையாட்டில் இந்தியாவின் புகழை உலக அளவில் உயர்த்தியவர் ஆவார். அவரது சாதனைகளை நினைவு கூறும் விதமாகவே ஒவ்வொரு ஆண்டும் அவரது பிறந்த தினமான ஆகஸ்ட் 29-ஆம் தேதி, தேசிய விளையாட்டுத் தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. 

 

விளையாட்டு ஆளுமைகள் பலரது வாழ்க்கை வரலாறு திரைப்படமாக்கப்பட்டு வரும் இவ்வேளையில், தயான் சந்த் வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்தி, திரைப்படம் ஒன்றினை இயக்கும் முயற்சியில் பிரபல பாலிவுட் இயக்குனரான அபிஷேக் சவ்பே உள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. அதற்கான கதை மற்றும் திரைக்கதை உருவாக்கும் பணிகள் நிறைவு பெற்றுவிட்டதாகவும், அடுத்த ஆண்டின் தொடக்கத்தில், இப்படத்தின் பணிகள் முழுவீச்சில் தொடங்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

 

 

 

Next Story

ஆரோக்கியமாக வாழ ஒவ்வொருவரும் இதனை செய்யுங்கள்... பிரதமர் மோடி பேச்சு...

Published on 29/08/2019 | Edited on 29/08/2019

உடல் ஆரோக்கியத்தை வலியுறுத்தும் வகையிலான 'ஃபிட் இந்தியா' இயக்கத்தை பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் இன்று காலை தொடக்கிவைத்தார்.

 

modi launch fit india movement

 

 

டெல்லியில் இன்று காலை நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் பல்வேறு வகையான விளையாட்டுப் போட்டிகள், தற்காப்புப் போட்டிகளும், நடனப்போட்டிகளும் நடைபெற்றன. இந்த விழாவில் 'ஃபிட் இந்தியா' இயக்கத்தை தொடங்கிவைத்து பேசிய பிரதமர் மோடி, "மக்கள் ஆரோக்கியத்துடன் இருப்பது, நாட்டின் வலிமைக்கும் வளர்ச்சிக்கும் மிகவும் இன்றியமையாதது.

ஆரோக்கியத்திற்கு மிகுந்த முக்கியத்துவம் அளித்தவர்கள் நமது முன்னோர்கள். பல்வேறு வகையான விளையாட்டுக்கள் நாட்டில் தொன்றுதொட்டு இருந்து வருவதற்கு நமது முன்னோர்கள் உடல் ஆரோக்கியத்தில் காட்டிய முக்கியத்துவமே காரணம். அதுமட்டுமல்ல பழங்கால நூல்கள் பலவற்றிலும் கூட ஆரோக்கியம் குறித்து வலியுறுத்தப்பட்டுள்ளது. அதுமட்டுமல்ல தினசரி உடற்பயிற்சிகளை செய்வதன் மூலம் ஒவ்வொருவரும் ஆரோக்கியமாக வாழ முடியும்" என தெரிவித்தார்.