ADVERTISEMENT

எதிரணிக்கு ஓப்பன் சேலஞ்ச் விடுத்த விராட் கோலி! - ஐ.பி.எல். போட்டி #48

05:33 PM May 14, 2018 | Anonymous (not verified)

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதும் டி20 கிரிக்கெட் போட்டி இன்று நடைபெறவுள்ளது. இந்தூரில் உள்ள ஹோல்கர் மைதானத்தில் வைத்து நடைபெறும் இந்தப் போட்டி, இரவு 8 மணிக்கு தொடங்குகிறது.

ADVERTISEMENT

ADVERTISEMENT

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் நடப்பு சீசனில் மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அணி கிங்ஸ் லெவன் பஞ்சாப். தாமதமாக வந்தாலும், கெயிலின் வருகைக்குப் பின்னால் மேலும் அச்சுறுத்தல் மிகுந்த அணியாக அது மாறியது. ஆனால், அது நீண்டகாலம் நீடிக்கவில்லை. தொடக்க ஆட்டக்காரர்களான கெயில் மற்றும் ராகுலைத் தவிர மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் அளவுக்கு ஒருவீரர் கூட எழுச்சிபெறவில்லை. பந்துவீச்சாளர்களிலும் ஆண்ட்ரூ டையைத் தவிர மற்ற யாரும் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தவில்லை.

ஒருவார நீண்ட இடைவெளிக்கு முன்னர் வரை ஏழு போட்டிகளில்ஐந்து வெற்றிகளுடன் வலுவாக இருந்தது பஞ்சாப் அணி. ஆனால், அதற்குப் பிந்தைய நான்கு போட்டிகளில் ஒன்றில் மட்டுமே வெற்றிபெற்று பின்னடைவைச் சந்தித்திருக்கிறது. கடைசியாக கொல்கத்தா உடனான போட்டியில் எதிர்பார்த்த ஆட்டத்தைக் காட்டமுடியாமல் தோற்றுப்போனது அந்த அணி. பிரகாசமாக இருந்த வாய்ப்புகளை நலுவவிட்டு, இன்று தோல்வியைப் பதிவுசெய்தால் நிச்சயம் தொடருக்கு வெளியே என்ற நிலைக்கு அந்த அணி வந்திருக்கிறது.

எதிரணியான பெங்களூரு பற்றி அதிகம் பேசத் தேவையில்லை. அந்த அணி இழப்பதற்கும் பெரிதாக ஒன்றும் இல்லை. ஆனால், சில மாயங்கள் நடந்தால் ‘சாலா கப் நம்தே’ என்ற வாசகத்தை அந்த அணி உண்மையாக்கலாம். இன்றைய போட்டி குறித்து விராட் கோலி, ‘எதிரணியினரை ரன்குவிப்பில் ஈடுபடச் சொல்லுங்கள்.. நாங்கள் அதை சேஷ் செய்து காட்டுகிறோம்’ என ஓப்பன் சேலஞ்ச் விடுத்திருக்கிறார். ஹோல்கர் மைதானத்தில் கடைசியாக நடந்த 8 போட்டிகளில் சேஷிங் செய்த அணிகளே ஏழுமுறை வெற்றிபெற்றிருக்கின்றன. விராட் கோலியின் இந்த சவாலை பஞ்சாப் அணி ஏற்றுக்கொள்ளுமா?

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT