Asian Championship Hockey Series Indian team is champion

ஆசிய சாம்பியன்ஷிப் ஹாக்கி தொடரின் இறுதிப்போட்டியில் சீனாவை வீழ்த்தி இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றுள்ளது.

Advertisment

சீனாவில் ஆசிய சாம்பியன் ஷிப் ஹாக்கி தொடர் நடைபெற்று வந்தது. இந்த தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியா - சீனா அணிகள் மோதின. அதன்படி நடைபெற்ற இறுதிப்போட்டியில் சீனாவை 1க்கு 0 என்ற கணக்கில் வீழ்த்தி, இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. இந்த போட்டியின் போது வெற்றிக்கான கோலை இந்தியாவின் ஹாக்கி வீரர் ஜுக்ராஜ் சிங் அடித்து அசத்தினார்.

Advertisment

இதன் மூலம் இந்திய அணி 5வது முறையாக ஆசிய சாம்பியன்ஷிப் ஹாக்கி தொடரின் சாம்பியன் பட்டம் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த நடப்புத் தொடரில் இந்திய அணி தோல்வியையே சந்திக்காமல் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளதும் கவனிக்கத்தக்கது.