Advertisment

ஆசியா கோப்பை டி20: முதல் வெற்றியை பதிவு செய்தது இந்தியா

Asia Cup. India registered the first win.

Advertisment

ஆசியா கோப்பை டி20 விளையாட்டு போட்டியின் பரபரப்பான ஆட்டத்தில் இந்தியாதனது முதல் வெற்றியை பதிவு செய்தது.

போட்டியில் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தார் இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா.

விராட் கோலியின் 100வது டி20 போட்டி, இந்தியா பாகிஸ்தான் போட்டி என ஏகப்பட்ட எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடந்த போட்டியில் இந்திய அணி போராடி வென்றது.

Advertisment

முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய கேப்டன் பாபர் ஆசாம் புவனேஸ்வர் குமார் பந்து வீச்சில் 10 ரன்களில் ஆட்டம் இழக்க ரிஸ்வான் பொறுமையாக ஆடி 43 ரன்கள் அடித்தார். பாகிஸ்தான் அணியின் மற்ற அனைத்து வீரர்களும் சொற்ப ரன்களில் ஆட்டம் இழக்க பாகிஸ்தான் அணி 19.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 147 ரன்கள் எடுத்தது. இந்திய அணி சார்பில் சிறப்பாக பந்து வீசி புவனேஸ்வர்குமார் 4 விக்கெட்களையும் ஹர்டிக் பாண்டியா 3 விக்கெட்களையும் அர்ஷிதீப் சிங் 2 விக்கெட்களையும் வீழ்த்தினர்.

பின்னர் களம்இறங்கிய இந்திய அணியின் தொடக்கமே அதிர்ச்சி தந்தது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கே.எல். ராகுல் தான் எதிர் கொண்ட முதல் பந்திலேயே ஆட்டம் இழந்தார். ரோஹித் சர்மாவும் சொற்ப ரன்களில் வெளியேற விராட் கோலி நிதானமாக ஆடி ரன்களை சேர்த்தார். 35 ரன்களில் இருந்த போது கேட்ச் கொடுத்து வெளியேற ரவீந்திர ஜடேஜாவும் சூரியகுமார் யாதவும் ஆட்டத்தை தொடர்ந்தனர். பொறுமையாக ஆடிய இந்த ஜோடியில் சூரியகுமார் யாதவ் 18 ரன்கள் எடுத்திருந்த நிலையில் போல்ட் ஆனார். பின் களம் இறங்கிய ஹர்டிக் பாண்டியா அதிரடி காட்டினார். ஜடேஜா ஹர்டிக் ஜோடி இந்திய அணியை தோல்வியில் இருந்து மீட்டனர். ஹர்டிக் காட்டிய அதிரடியில் கடைசி ஓவரில் 7 ரன்கள் தான் தேவை என்ற நிலை வந்தது. இந்நிலையில் ஓவரின் முதல் பந்திலேயே ஜடேஜா போல்ட் ஆனார். தினேஷ் கார்த்திக் இறங்கி ஒரு ரன் எடுத்துக்கொடுக்க சிக்ஸ் அடித்து ஆட்டத்தை முடித்தார் ஹர்டிக் பாண்டியா. இந்திய அணியில் அதிக பட்சமாக விராட் கோலி 35 ரன்களும் ஜடேஜா 35 ரன்களும் ஹர்டிக் பாண்டியா 17 பந்துகளில் 33 ரன்களும் எடுத்தனர்.

பாகிஸ்தான் சார்பில் முகம்மது நவாஸ் 3 விக்கெட்களும் நசீம் ஷாஹ் 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். சிறப்பாக பந்து வீசி 33 ரன்கள் எடுத்த ஹர்டிக் பாண்டியா ஆட்டநாயகன் விருதை வென்றார்.

இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe