/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/New Project (23).jpg)
ஆசிய கண்டதைச் சேர்ந்த இந்தியா, இலங்கை, பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகள் மோதும் கிரிக்கெட் தொடர் ஆசிய கோப்பை. கடைசியாக இத்தொடர் கடந்த 2018ஆம் ஆண்டு நடைபெற்றது. அதில் இந்திய அணி வென்றது. அதன்பிறகு ஆசிய கோப்பை தொடர் நடைபெறவில்லை.
இந்தநிலையில், இந்த ஆண்டுஜூன் மாதம் நடைபெறுவதாக இருந்த ஆசிய கோப்பை தொடர் இரத்து செய்யப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த ஆண்டிற்கான ஆசிய கோப்பையை இலங்கை நடத்துவதாக இருந்த நிலையில், கரோனாபரவல் காரணமாக ஜூன் மாதம் தங்கள்நாட்டில் ஆசிய கோப்பையை நடத்துவது சாத்தியமில்லை இலங்கை கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
இதனால் ஜூன் மாதம் ஆசியகோப்பை தொடர் நடைபெற இயலாத நிலை ஏற்பட்டுள்ளது. அதேசமயம், ஜூன் மாதத்திற்குப் பிறகு இந்தியா உள்ளிட்ட முக்கிய அணிகளுக்குப் பல்வேறு சர்வதேச போட்டிகள் இருப்பதால், 2023 ஆண்டுவரைஆசிய கோப்பை தொடரை நடத்த வாய்ப்பில்லை என்றும், எனவே இந்த ஆண்டிற்கான ஆசிய கோப்பை இரத்து செய்யப்படுவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
Follow Us