''கிரிக்கெட் அல்லாத வேறொரு விளையாட்டைச் சார்ந்த ஒருவர் சிறந்த கிரிக்கெட் வீரராக ஆகியிருக்கலாம் என்று நீங்கள் நினைப்பது யாரை?'' என ஐ.சி.சி. கேட்டிருந்த கேள்விக்கு வடிவேலுவை வைத்து கிண்டல் பதில் ஒன்றை பதிவிட்டுள்ளார் இந்திய கிரிக்கெட் வீரர் அஸ்வின்.

Advertisment

ashwin reply to icc with vadvelu charecter

உலகம் முழுவதும் கரோனாவால் முடங்கிப்போயுள்ள நிலையில், சாமானியர் முதல் செலிபிரிட்டிகள் வரை தங்களது நேரத்தை சமூகவலைத்தளங்களிலேயே அதிகம் செலவிட்டு வருகின்றனர். அந்த வகையில் ஆன்லைனில் நேர்காணல்கள் செய்வது, மக்களுடன் கலந்துரையாடுவது என பல்வேறு துறைகளை சார்ந்த பிரபலங்களும், பல பொழுதுபோக்கு நிறுவனங்களும் சமூக ஊடங்களில் பிஸியாக இயங்கி வருகின்றனர்.

Advertisment

NAKKHEERAN APP

அந்த வகையில், சர்வதேச கிரிக்கெட் கட்டுப்பாடு வாரியமான ஐசிசி, தனது சமூக ஊடக பக்கத்தில், ''கிரிக்கெட் அல்லாத வேறொரு விளையாட்டைச் சார்ந்த ஒருவர், சிறந்த கிரிக்கெட் வீரராக ஆகியிருக்கலாம் என்று நீங்கள் நினைப்பது யாரை?'' என கேள்வியெழுப்பியிருந்தது. இதற்கு ரசிகர்கள் பலரும் பல பிரபலங்களின் பெயரை பதிலாக கூறி வருகின்றனர்.

அந்த வகையில் இதற்கு பதிலளித்த கிரிக்கெட் வீரர் அஸ்வின், “கோவில்படத்தில் வரும் புல்லட் பாண்டியைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?'' என கிண்டலாக தெரிவித்துள்ளார். அதோடு இல்லாமல், ''திரைப்படங்களில் வரும் மற்ற விளையாட்டைச் சேர்ந்த வீரர்கள் யார் சிறந்த கிரிக்கெட் வீரராக ஆகியிருக்கலாம் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்'' என்று கேள்வியும் எழுப்பியுள்ளார். இதற்கு ரசிகர்களும் பல்வேறு கிண்டலான பதில்களை அளித்து வருகின்றனர்.