Ashwin to his homeChennai team IPL auction

உலக அளவில் புகழ்பெற்ற கிரிக்கெட் தொடரான ஐ.பி.எல். டி20 தொடர் கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. அந்த வகையில், 2025ஆம் ஆண்டுக்காக 18வது சீசன் அடுத்த ஆண்டு ஐபிஎல் போட்டி நடைபெறவுள்ளது. இந்த ஐபிஎஸ் போட்டிக்கான மெகா ஏலம் இன்று (24-11-24) சவுதி அரேபியாவின் ஜெட்டாவில் நடைபெற்று வருகிறது. ஏலத்தில் பங்கேற்க 1,574 பேர் பதிவு செய்த நிலையில் மெகா ஏலத்தில் 574 பேர் தேர்வு செய்யப்படுவர். 574 ஐ.பி.எல் வீரர்களில் 368 இந்தியர்கள் மற்றும் 209 வெளிநாட்டு வீரர்கள் இருப்பார்கள்.

Advertisment

அந்த வகையில், முதல் வீரராக ஏலம் எடுக்கப்பட்ட அர்ஷ்தீப் சிங்கின் அடிப்படை விலை ரூ.2 கோடியாக இருந்தது. இவரை வாங்குவதில் ஐபிஎல் அணிகள் இடையே கடும் போட்டி நிலவியது. ஜதராபாத் சன்ரைசர்ஸ் அணி, ரூ.18 கோடிக்கு ஏலம் கேட்ட நிலையில் ஆர்டி மூலம், அர்ஷ்தீப் சிங்கை ரூ.18 கோடிக்கு ஏலம் எடுத்து பஞ்சாப் அணி அவரை தக்க வைத்துள்ளது. தென் ஆப்பிரிக்கா வீரர் ககிஸோ ரபாடா ரூ.10.75 கோடிக்கு குஜராத் அணி வாங்கியுள்ளது.

Advertisment

அதே போல், ரூ.26.75 கோடிக்கு பஞ்சாப் அணி ஸ்ரேயஸ் ஐயரை ஏலம் எடுத்தது. இதையடுத்து, இந்திய வீரரான ரிஷப் பந்த் ரூ.27 கோடிக்கு லக்னோ அணியால் ஏலம் எடுக்கப்பட்டார். ஐபில் ஏலத்தில் அதிக விலைக்கு ஏலம் போன விரர் என்ற சாதனையை ரிஷப் பந்த் படைத்துள்ளார். இதுவரை அதிகபட்சமாக விராட் கோலி ரூ.23 கோடிக்கு ஏலம் போன நிலையில் ரிஷப் பந்த் அதனை முறியடித்து சாதனை படைத்துள்ளார்.

இந்த நிலையில், தமிழக வீரரான சுழற்பந்து வீச்சாளர் அஸ்வினை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரூ.9.75 கோடி ஏலம் எடுத்து வாங்கியுள்ளது. தொடக்க காலத்தில் இருந்தே சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இருந்த அஸ்வீன், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி உள்பட சில அணிக்கு மாறினார். தற்போது, 9 ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு மீண்டும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் அஸ்வின் திரும்புகிறார். அதே போல், நியூசிலாந்தின் ரச்சின் ரவீந்திராவை ரூ.4 கோடிக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஏலம் எடுத்துள்ளது.

Advertisment