Advertisment

இது இறுதி எச்சரிக்கை... இதற்கு மேல் என்னைக் குறை கூறாதீர்கள்.. அஷ்வின் பதிவு

Ashwin

13-வது ஐபிஎல் தொடர் அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. கடந்த தொடரில் பஞ்சாப் அணிக்காக விளையாடி வந்த அஷ்வின் நடப்பு ஐபிஎல் தொடரில் டெல்லி அணிக்காக விளையாடி வருகிறார். டெல்லி அணிக்காக விளையாடிய முதல் போட்டியில் ஏற்பட்ட காயம் காரணமாக வெளியேறிய அஷ்வின் பெங்களூரு அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் களம் கண்டார். இப்போட்டியில் டெல்லி அணி 59 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

Advertisment

கடந்த தொடரின் போதே அஷ்வின் பேட்ஸ்மேனை மன்கட் முறையில் ஆட்டமிழக்கச் செய்த விவகாரம் பெரிய சர்ச்சையாக உருவெடுத்தது. கிரிக்கெட் விதிப்படி இது சரியென்று ஒரு தரப்பு முன்வைத்தாலும், மற்றொரு தரப்பு கிரிக்கெட் மாதிரியான ஜென்டில்மேன் விளையாட்டில் இது விக்கெட் வீழ்த்துவதற்கான சரியான அணுகுமுறை இல்லை என்று கூறியது. இந்நிலையில், நேற்றைய போட்டியின் போது பெங்களூரு அணி வீரர் ஆரோன் பிஞ்ச் விக்கெட்டை மன்கட் முறையில் வீழ்த்த அஷ்வின் முயற்சித்தார். பின் விக்கெட்டை வீழ்த்தாமல் இறுதி எச்சரிக்கை மட்டும் கொடுத்தார். இது குறித்து அஷ்வின் தன்னுடைய சமூக வலைத்தள பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார்.

Advertisment

அதில், "நான் ஒன்றை தெளிவு படுத்துகிறேன். இது முதல் மற்றும் இறுதி எச்சரிக்கை. அதிகாரப்பூர்வமாக இதைக் கூறுகிறேன். அதன் பின்பு என்னைக் குறை கூறாதீர்கள்" எனப் பதிவிட்டுள்ளார்.

Ashwin
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe