Advertisment

தலைமை பயிற்சியாளர் ஆகும் ஆஷிஷ் நெஹ்ரா; ஆலோசகராக கேரி கிர்ஸ்டன் - விரைவில் அறிவிக்கும் ஐபிஎல் அணி

ashish nehra

Advertisment

2022 ஆம் ஆண்டிலிருந்து ஐபிஎல் தொடரில், அகமதாபாத், லக்னோ ஆகிய இரண்டு புதிய அணிகள் பங்கேற்கவுள்ளன. இந்தநிலையில்அகமதாபாத் அணியின் தலைமை பயிற்சியாளராக ஆஷிஷ் நெஹ்ரா நியமிக்கப்படவுள்ளதாகஅதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

அதேபோல் அகமதாபாத் அணியின் ஆலோசகராக கேரி கிர்ஸ்டன் நியமிக்கப்படவுள்ளதாகவும் அந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. 2011 ஆம் ஆண்டு இந்தியா உலக கோப்பையை வென்றபோது, அணியின் பயிற்சியாளராக இருந்தவர் கேரி கிர்ஸ்டன் என்பது குறிப்பிடத்தக்கது. 2011 இந்திய உலகக்கோப்பைஅணியில் ஆஷிஷ் நெஹ்ராவும்இடம்பெற்றிருந்தார்.

மேலும் கேரி கிர்ஸ்டன் மற்றும்ஆஷிஷ் நெஹ்ரா இருவருமேபெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் பயிற்சியாளராக இருந்துள்ளது குறிப்பிடத்தக்கது.கேரி கிர்ஸ்டன் மற்றும்ஆஷிஷ் நெஹ்ராவின் நியமனங்களை அகமதாபாத் அணி விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் எனவும் அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் கூறியுள்ளன.

Ashish Nehra Gary kristen
இதையும் படியுங்கள்
Subscribe