ஆஷஸ் கிரிக்கெட் தொடரின் முதல் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்து விளையாடி வருகிறது.

ashes test series started in england

Advertisment

Advertisment

இங்கிலாந்து நாட்டில் தொடங்கியுள்ள இந்த டெஸ்ட் தொடர் மொத்தம் 5 போட்டிகளை கொண்டது. 100 ஆண்டுகள் பாரம்பரியம் மிக்க இந்த ஆஷஸ் தொடரை காண பல நாடுகளிலுமிருந்தும் கிரிக்கெட் ரசிகர்கள் இங்கிலாந்தில் குவிந்துள்ளனர்.

ஆஸ்திரேலிய அணியில், கீப்பர் டிம் பெயின் கேப்டனாக விளையாடுகிறார். அவரை தவிர்த்து, டேவிட் வார்னர், கேம்ரோன் பேன்கிரஃப்ட், உஸ்மான் கவாஜா, ஸ்டீவ் ஸ்மித், ட்ரெவிஸ் ஹெட், மேத்தீவ் வாட், ஜேம்ஸ் பட்டின்சன், பட் கம்மிங்ஸ், பீட்டர் சிடில், நாதன் லையன் ஆகியோர் உள்ளனர்.

இங்கிலாந்து அணியில் கேப்டன் ஜோ ரூட், ரோரி பர்ன்ஸ், ஜாசன் ராய், ஜோ டென்லி, ஜாஸ் பட்லர், பென் ஸ்டோக்ஸ், ஜானி பேரிஸ்டோவ், மொயின் அலி, கிரிஸ் வோக்ஸ், ஸ்டுவார்ட் பிராட், ஜேம்ஸ் ஆண்டர்சன் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.