விளையாட்டு வீரர்களை கௌரவப்படுத்தும் விதமாக மத்திய அரசால் ஆண்டு தோறும் பல்வேறு வகையான விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.

arjuna award for cricketer ravindra jadeja

Advertisment

Advertisment

அந்த வகையில் 2019 ஆம் ஆண்டுக்கான அர்ஜுனா விருது, துரோணாச்சாரிய விருது, ராஜிவ் காந்தி கேல் ரத்னா விருது, தயான்சந்த் விருது ஆகியவற்றை பெறுபவர்கள் யார் என்பது குறித்த பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் இந்திய கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜாவிற்கு அர்ஜுனா விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் தமிழகத்தை சேர்ந்த பாடி-பில்டிங் வீரரான பாஸ்கருக்கும் அர்ஜுனன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தீபா மாலிக், பஜ்ரங் பூனியா ஆகியோருக்கு ராஜிவ் காந்தி கேல் ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது.