Arjuna award announcement for Tamil chess player

Advertisment

மத்திய அரசின் விளையாட்டுத்துறை அமைச்சகம் சார்பில் 26 பேருக்கு விளையாட்டு வீரர்களுக்கான அர்ஜுனா விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி கிரிக்கெட்டில் சிறந்த பங்களிப்பு செய்ததற்காக இந்திய கிரிக்கெட் வீர முகமது ஷமிக்கு அர்ஜுனா விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அண்மையில் கிராண்ட்மாஸ்டர் பட்டம் வென்ற வைஷாலிக்கு அர்ஜுனா விருதை மத்திய அரசு அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் கிராண்ட்மாஸ்டர் பட்டம் பெற்ற முதல் பெண் வீராங்கனை வைஷாலி என்பதும், கடந்த ஆண்டு பிரக்ஞானந்தா அர்ஜுனா விருது வென்ற நிலையில் இந்தாண்டு அவரது சகோதரி வைஷாலிக்கு அர்ஜுனா விருது அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

அதோடு 5 பேருக்கு துரோணாச்சாரியார் விருதும் அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் தமிழ்நாடு செஸ் பயிற்சியாளர் ஆர்.பி. ரமேஷ், மல்யுத்தம் பயிற்சியாளர் லலித் குமார், பாரா தடகள பயிற்சியாளர் மகாவீர் பிரசாத், ஹாக்கி பயிற்சியாளர் ஷிவேந்திர சிங், மல்லர் கம்பம் பயிற்சியாளர் கணேஷ் பிரபாகர் ஆகியோருக்கு துரோணாச்சாரியார் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.