ஸ்பெயின் நாட்டின் பிரபல கால்பந்து வீரரும், ஆர்சனல் அணிக்காக கடந்த 2003.2004 ஆம் ஆண்டில் விளையாடிய வீரருமான ஜோஸ் அன்டோனியோ ரெய்ஸ் கார் விபத்தில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/ggfgf.jpg)
1983 ஆம் ஆண்டு பிறந்த இவர் தனது 35 ஆவது வயதில் கார் விபத்தில் இறந்துள்ளார். எப்போது, எப்படி விபத்து ஏற்பட்டது என்பது குறித்து தகவல்கள் வெளியாகவில்லை. ஸ்பெயின் தேசிய அணிக்காக 21 ஆட்டங்களிலும், அண்டர் 21, 19, 16 உள்ளிட்ட அந்நாட்டின் தேசிய அணிக்காக 21 ஆட்டங்களிலும் விளையாடியுள்ளார். ஆர்சனல் அணிக்காக இவர் விளையாடிய தொடரில் அந்த அணி ஒரு ஆட்டத்தில் கூட தோல்வியடையாமல் இருந்ததற்காக 'இன்வின்சிபிள்' பட்டம் பெற்றதுடன், கோப்பையையும் வென்றது என்பது குறிப்பிடத்தக்கது.
  
 Follow Us